இன்று தூங்கினால் நாளை விழிப்போமா என்று கூட நமக்கு தெரியாது..
நிச்சயமில்லாத வாழ்வு
ஒரு அசட்டு நம்பிக்கையில் தானே அத்தனைக்கும் உரிமை கொண்டாடுகிறோம்.
பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு தூசு நாம் என அறிந்தும் கூட எந்த அசட்டு நம்பிக்கையில் பொருள் ஈட்டுகிறோம்??
-
ஏதேதோ நினைவுகளில் மனம் போனாலும்
என் அத்தனை நினைவுகளின் ஆதியும் அந்தமும்
நீ தான்..
என் மனம் மூளையிடம் தர்க்கம் செய்கிறது ஏன் என் நினைவெல்லாம் நீயாக இருக்கிறாய் என்று..
உன் நினைவுகளால் முழுகப்பட்ட எனக்கு முக்காலமும் ஒன்றாகி தான் போனது!
காலங்களைக் கடந்து என்னுள்ளே பிரவேசித்து விட்டாய் என் நினைவெல்லாம் நீயாக...-
கடற்கரை மணலில் பதிந்து கிடக்கும் பல காலடி சுவடுகளை அழைத்துச்( அழித்து) செல்லும் கடல் அலைகளுக்கு தெரியாது, தான் அழைத்துச் ( அழித்து) செல்வது பல நூறு இதயங்களின் தாங்க முடியாத பாரத்தின் சுவடுகள் என்று!!
எத்தனை வேதனைகள் இருந்தாலும் அத்தனை வேதனைகளும் கடற்கரை மணலில் கால் பதித்த தருணம் மனம் லேசாகி விடுகிறது இதனால்தான் என்னவோ...-
மௌனத்தைப் போல ஒரு வலுவான ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!
அந்த ஆயுதத்தை கையாள தெரிந்தவர்கள் தான் எந்த சூழ்நிலையிலும் தன்னையும், தன்னை சுற்றியுள்ள சூழலையும், பாதிப்புக்குள்ளாக்காமல் கடந்து செல்வார்கள்...-
ஓசையற்ற அழுகைக்கு பின்னே ஆயிரம் ஆயிரம் வடுக்கள் மறைந்திருக்கிறது!
ஒவ்வொரு வடுக்களும் ஓராயிரம் கண்ணீர கதை சொல்லும்..
தன் சுயத்தை காட்டிக் கொள்ள முடியாமல் குறைந்தபட்ச தனக்கான நிம்மதியை கூட தேடி எடுக்க முடியாத நிலையில் தன்னுள்ளே புதைந்து போன வலிகளையாவது யாருக்கும் தெரியாமல் கொட்டி தீர்த்திட வேண்டும் என்னும் முழு முயற்சியின்,உச்சகட்ட வேதனையே ஓசை இல்லாத அழுகை...-
உன் நேசத்தை காட்டும்
என் சுவாசம்
மண்ணில் எனக்கான உன் நேசம் உள்ளவரை
தாயே , உயிர்ப்போடு வாழும் என் சுவாசம்!-
காதல் கதைகளில்,
மெய் தீண்டா மௌனங்கள் அழகு!
மென்மையான புரிதலோடு கொண்ட ஊடல்கள் அழகு!
-
உனக்கான என் நேசம் என்பது, ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்து இருந்தாலும் உன்னை தேடி அலையும் அந்த கண்களில் உள்ளது !
உனக்கான என் நேசம் என்பது, என்னை உனக்கானவளாய் நீ காணும் பொழுது என் காதல் உன் மீது பன்மடங்காய் பெருகி ஊற்று எடுக்கும் பொழுது வெளிப்படுவது!-
இறுக்கமான சூழலில் நான் தனிமையை ஒரு போதும் விரும்புவதில்லை பெரும்பாலான அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நான் என் கூறிய பேனா முனைகளைக் கொண்டே கிழித்து எரிந்து இருக்கிறேன்!
-
ரயில் பெட்டிகளைப் போல நீண்டு கிடக்கும் நம் கடமைகளில் தண்டவாளமெனும், உறவுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமல் கடமையை கர்ம வினை என கருதி அதை முன்னோக்கி இழுக்கும் முயற்சியில் தடம் புரளாமல் நம்மை இயக்கும் சக்தி , ஒன்று உண்டென்றால் அது சிறந்ததே!
-