Nisha lakshmanan   (நிஷா|@_thamizhi_)
14 Followers · 8 Following

Aims to be lyricist
Joined 3 April 2019


Aims to be lyricist
Joined 3 April 2019
1 SEP 2022 AT 18:08

புல்லினும் கீழாய்
மதிப்பிழந்து
வாழ்வதினும் மேலாய்
மாரியாதை போர்வைக்குள்
மரணத்தை ஏற்ற
சில மானிடர்களிடம்
என்ன கோழைத்தனத்தை
கண்டனர் இந்த
"சரியான மனிதர்கள்"
தாங்கள் கிள்ளிவிட்ட
பிள்ளையினும் பெரிதாய்!

-


1 JUN 2022 AT 22:16


கனவுகளிலேயே
வாழ்வதாலோ ஏனோ

ஒவ்வொரு முறை
கலையும் கனவிலும்

நான் அணுவனுவாய்
மரணிக்கின்றேன்!

-


4 APR 2022 AT 14:20

தனிமையின்
போர் களத்தில்
எதிர்த்து
நின்று போராட
தனிமையைத்
தேடி அலைகிறேன்
தனிமையில்!

-


7 MAR 2022 AT 20:47

முன்திரை புன்னகையில்
ம(ற)றைந்திருக்கும்
பின்திரை கண்ணீர்
பல நேரங்களில்
கரை தாண்ட மறுத்து
அணைக்கட்டாய்
தேங்கிவிடுகிறது!

-


2 MAR 2022 AT 21:50

ஏணி என்று எண்ணி
ஏற நினைத்தேன்!
ஏறி முடித்து மெல்ல
எட்டிப் பார்த்தேன்!
அப்போதுதான் தெரிந்தது
ஏறியது கிணற்றுப்படி என்று!
வானத்தை அடைய
கை நீட்டி பறந்தவள்!
மிதந்து கொண்டிருக்கிறேன்
தரைமட்டத்தில் இன்று!
நிலவோடு கைக்கோர்த்து!

-


20 FEB 2022 AT 14:25

அனுதினமும் காதல் பேசி
அயர்ந்து போன போதிலும்
ஆசை தீராமலே ...
கொஞ்சம் கெஞ்சலாய் பார்க்கிறது
என் பேனா முனை
இன்னும் ஓர் கவிதையென்று!

-


13 AUG 2021 AT 20:35

தனிமையின் வ(நெ)ருடலில்
தேயும் வளர்பிறை!

-


6 JUN 2021 AT 11:10

எண்ணிலா ஏடுகள் படைத்த
எழுத்தன் எவனும்
தன் சொந்த ஏட்டை
எழுத்தாக்க துணிவதில்லை!

-


6 JUN 2021 AT 10:57

நான் எழுதிய
பக்கங்களை
வார்த்தைகள்
நிரப்பியிருக்கும்!

நான் எழுதாத
பக்கங்களில் தான்
என் வாழ்க்கை
நிரம்பியிருக்கும்!

-


6 JUN 2021 AT 10:51

என் கற்பனைகள்
தீர்ந்ததோ என்று
தவிக்கும் நாட்களில்
கனவின் வழியே
வலிகள் பேசுகின்றன
எழுத்தை செதுக்கும்
பேனா முனை
துளி மையால்!

-


Fetching Nisha lakshmanan Quotes