நம் வாழ்வின் இன்ப துன்பங்கள்
மற்றவர்களின் செயல்களாலும்
தீர்மானிக்கப்படும்
-
பாதை ஒன்று
இன்று பயணம் செய்யும்
பாதை ஒன்று .
மதிப்பு மிக்கவை
தான் என்றாலும்
அவை சில்லறையாக
நம் மனதில் சத்தமிட்டு
கொண்டே இருக்கும்-
இன்பங்களாக இருக்க
ஆசைகொள்கிறோம்
என்ன செய்வது இதையும்
அதீத ஆசை என்கிறது
இந்த இரவுகள்.
@நிழலன்-
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்துவிட்டேன்
கல்வியில் தொடங்கி
காதல் வரை.......
கலங்குவதே
வேலையங்கிப்போனது
இந்த கண்களுக்கு
விழித்த நாள் முதல்....
_முகமறியா முகவரி ✍️
-
ஒவ்வொரு விடியலும் சில
எதிர்பார்ப்புகளோடு தான்
நம்மை எழுப்புகின்றன....
ஒவ்வொரு இரவும்
அதில் கிடைத்த
அனுபவங்ளோடு
நம்மை உறங்க வைக்கின்றன...
எதிர்பார்ப்புகளை எளிதில்
ஏற்றுக்கொள்ளும் மனித மனங்கள்
அதில் கிடைக்கும் அனுபவங்களை
அவ்வளவு எளிதில்
ஏற்றுக்கொள்வதில்லை..
தீர்க்கப்படாத இந்த கணக்குகள்
ஏனோ இரவுகளை ஒருபோதும்
இனிமையாக்குவதில்லை....
முகமறியா முகவரி ✍️-
அருகில் இருந்தால் ஆறுதல் கூறி
அனைத்து தேற்றியிருப்பேன்
என்று சொல்லும் உறவுகள்
ஒன்றை மறந்துவிடுகின்றன...
தன்னால் தான் ஆறுதல்
அடைவார்கள் என்று
தெரிந்திருந்தும் தன்னை
நியாயப்படுத்திக்கொள்ள
அவர்கள் கூறும் காரணங்கள்
தான் வலிகளின் உச்சம்....
அதை அறிந்தும் அமைதியை
வெளிப்படுத்துவது தான் நம்
அனுபவத்தின் சிறப்பு.......
முகமறியா முகவரி ✍️-
சுயநலம் கொண்ட காற்றே.
மோகம் தோன்றும் போதெல்லாம்
நீ மட்டும் எங்களை உரசி சென்று
இன்பமுறுகிறாய்....
சிறிதேனும் நன்றியுணர்வோடு
நீ உரசும் உள்ளங்களில் உள்ள
கவலைகளையும்
கடத்திக்கொண்டு போ..
குளிர்ந்த தேகம் கொண்டு
நீ வருவாய் என உஷ்ணத்தில்
சிக்கிக்கொண்டு பல இதயங்கள்
காத்துகிடக்கின்றன...
காணக்கிடைக்காத காற்றே,
காலம் தவறும் முன்னரே
காயங்களை ஆற்றிவிடு
பின் இருவரும் இன்பமாய்
விளையாடுவோம்.....-
இயற்க்கை
வினைகளை பொறுத்து தான்
எதிர்வினை இருக்கும்,
என் மாற்றத்திற்கு உங்கள்
சுயநல எண்ணம் தான் காரணம்.
ஆனால், என் எதிர்வினை இன்னும்
பொதுநலமாகவே உள்ளது.
ஆம்,நான் நினைத்தால் ஒரு
நொடியில்உங்களை
அழித்து விட முடியும்.
[ ஒருவேளை நான் உங்களை
பிரசவித்திருந்தால் தாயாக எண்ணி என்னை
பாதுகாத்திருப்பிர்களோ? ]-
இதயத்தின் அருகில்
எப்போதும் புன்னகையை வைத்துக்கொள்ளுங்கள்,
அது உங்கள் ஆரோக்கியத்திற்கு
பொன் நகைகளை சூட்டும்...
" நீண்ட ஆயுளின் எரிபொருள் புன்னகை "-