Nila   (Nila)
4.4k Followers · 137 Following

💉 doctor ☯ one who finds peace in silence, darkness and loneliness ☮

அன்பே சிவம்! ❤
Joined 16 November 2016


💉 doctor ☯ one who finds peace in silence, darkness and loneliness ☮

அன்பே சிவம்! ❤
Joined 16 November 2016
Nila YESTERDAY AT 1:37

அடைமழை,
அருகில் நீ,
பெய்து ஓய்ந்த பின்னும்
மரம் சிந்தும் தூரலாய்,
நீ விட்டுச் சென்ற
பல மணிநேரத்திற்குப் பிறகும்
எனைத் தீண்டிச் செல்கிறது
உன் நினைவுச் சாரல்.

-நிலா

-


Nila 4 AUG AT 1:47

3.00 am

-


Nila 29 JUL AT 8:37

PURSUIT OF HAPPYNESS

-


Nila 18 JUL AT 23:22

தனிமைப் பிரியைதான்,
எனினும் சில சமயங்களில் தேவைப்படுகிறது
சாய்ந்து கொள்ள ஒரு தோள்.

-நிலா

-


Nila 18 JUL AT 1:26

கோவில்.
உள்ளே உண்டியல்,
வெளியே திருவோடு.

பிச்சைக்காரன்.

-நிலா

-


Nila 18 JUL AT 1:17

சுற்றிக் கொண்டிருக்கும் பம்பரம்
நின்றுதானே ஆக வேண்டும்,
இவ்வளவுதான் வாழ்க்கை.

-நிலா

-


Nila 16 JUL AT 17:07

பறந்து செல்ல ஆசைதான்
பறவையாய்
ஆனால் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்
பட்டமாய்.

-நிலா

-


Nila 16 JUL AT 16:49

முகமூடிகள் இரண்டாயிற்று
மனிதனுக்கு,
கொரோனாவால்.

-நிலா

-


Nila 16 JUL AT 16:31

புத்தகக் கடைக்குச் சென்று வந்தேன்,
புத்தக மணம் ஒட்டிக் கொண்டிருந்தது மேனியெங்கும்,
என் மனம் மட்டும் ஏனோ சிக்கிக் கொண்டிருக்கிறது
ஓரிரு கவிதை வரிகள் படித்துவிட்டு வாங்காமல் வந்த
சில கவிதைப் புத்தகப் பக்கங்களின் மத்தியில்,
சிறைக் கைதியாய்.

-நிலா

-


Nila 10 JUL AT 15:26

have you ever been
scared of love?

-


Fetching Nila Quotes