வலிகளை மறக்க வரிகளில் வடித்து வாசத்தில் மடித்து நேசத்தில் இரசித்து நெஞ்சில் புதைக்கின்றேன்..!!!
-
தொலை தூரத்தில்
உனது
வாடை வீசசுகிறது
எம் பெண்மையின்
வஸ்த்திர
மெல்லாம் பேசுதடா..!!!-
தனிமையிலும்
உம் நினைவுகள்
ஓடம்
போல ஓசையின்றி
மனதில்
மெல்ல மெல்ல
அசைப்போட்டு
உன் சுவாசம் வீசும்
திசையெங்கும்
தீரா காதல்
தாகம் திரல்கிறது..!!!-
தொலை தூரத்தில்
மலைப்போல
உம் நினைவுகள்
நிழலாக தொடர்ந்து
குழலாக
இசைத்து
உன் நினைவில் குடி
கொண்டு
நிஜமாக
மடியெந்தி
மயங்குகி மௌனமாக
தயங்கும்
எம் பெண்மையை
என் செய்வேனடா..!!!-
உனது உறைய
வைக்கும் உரையாடல்
தொல்லை செய்கிறது
மிக அருகாமையில்
அன்னையைப்
போன்று அனைத்து
தவறுகளையும் மன்னிப்பாயா..!!!-
உன்னுடைய தீண்டல்
தேவையானது தான்..!
உன்னுடைய முத்தம்
தேவையானது தான்..!
உன்னுடைய அணைப்பு
தேவையானது தான்..!
உன்னுடைய இறுக்கம்
தேவையானது தான்..!
உன்னுடைய நட்பு
தேவையானது தான்..!
ஆனால் அதையெல்லாம்
தாண்டி ஒரு
மொழியற்ற மௌனம்
உனது
பக்கத்தில் உட்காறுவது
தான் மனதிட்கு
முழுமையான
நிம்மதி தருகிறது..!-
உண்மையை எந்த
உறவிடமும்
எதிர்பார்க்காதே
அது உன்
உயிரை ஆழமாக
அறுத்து
கரைத்து
குடித்து விடும்..!!!-
சில தருணங்களை
கடக்கவே
முயற்சி செய்கிறேன்
ஏனோ!
கடக்காமல்
கனமாக கரைகின்றேன்..!!!-
வாழ்க்கை வலிகள்
நிறைந்த
பாடத்தை கற்பிக்கிறது
வாழ்வோ
வாசம் நிறைந்த
மலர்களை
இரசிக்க செய்கிறதே..!!!-