I can't be angry with you so long
as it agonises me
as thousand deaths!
23 DEC 2020-
Doing nothing is sometimes one of the
highest of the duties of man.
- G. K. Chesterton-
They prolonged together...
Both,
the kiss and the night!
06 March 2019-
பாலைநிலமாய்
வெறுமையில் இருக்கின்றன
என் கவிதைகள்...
நைல் நதியாய்
வழிந்தோடி வரும்
உன் வார்த்தைகளில்,
கால் நனைத்துச் சிலிர்த்திருக்கின்றது
நம் காதல்.
- நவீனா
18 அக்டோபர் 2018-
நான் எதையும்
கவிதையாக எழுத
நினைக்கவில்லை ---
பெருமழையின் துளியொன்று,
நம் காதலை
கண்கொட்டாமல் பார்க்கிறது...
எழுதிவிட்டுப்போ என
வழிவிட்டு மட்டுமே நிற்கிறேன்!
-நவீனா
03 அக்டோபர் 2018
-
உன் கரம் பிடித்து நடக்க
கையின் ரேகைகள் உயிர்பிடித்து,
நாடி நரம்புகளாகின்றன.
இரத்த ஓட்டம் பாய்ந்து,
பச்சையென புடைத்து...
வேரெனப் பரவி...
கிளைதோறும்
காதல் கிளிகள் கீச்சிடுகின்றன!
- நவீனா
20 செப்டெம்பர் 2018-
நம் காதலுக்குள் புதைந்துவிட்ட
காலைச் சூரியன்
மேகத்தாள்களில் கவிதை
வரைகிறான்...
வானில், இன்னுமொரு சூரியனை
நம் காதல்
வரைந்துகொண்டிருக்கிறது.
- நவீனா
19 செப்டம்பர் 2018-
உன்னில் பாதியை
என்னுள் நிரப்பிக்கொண்டேன்,
இதயம் எடையிழந்து...
நிழலெனக் காதலை
கடல்மணலில்
வரைந்துகொண்டிருக்கிறது.
- நவீனா
11 செப்டம்பர் 2018
-
தூர தேசத்து பறவைகளின்
அந்திவானம்...
நீண்ட பாம்பென பறக்கும்
அவற்றின் நிழலில்
இரவாகிறது
அலுவல் தீர்ந்து கிளைசேரும்
பறவைகளின் மௌனப்புள்ளியில்
பிரபஞ்சக்காதலின்
வானம் திறந்துகொள்கிறது
- நவீனா
02 செப்டம்பர் 2018
-
மேகமெனும் கடலில்
இரவையும் பகலையும்
கரைத்துவிட்டு...
காதல்,
முடியாத நாளின்
ஒளிப்பிழம்பாய்
விழித்திருக்கிறது
- நவீனா
19 ஆகஸ்ட் 2018-