விழிகள் நான்கும் விவாதம் நடத்துகிறது...!!
இதழ்கள் இரண்டும் இறுக்கம் கொள்கிறது..!!
பார்வையிலே வார்த்தைகள் பந்தாடப்படுகிறது..!!-
Instagram: Nandhinipesuni
ஒன்றும் புரியாமல் இல்லை
எல்லாம் புரிகிறது! ஆனால்
மனம் தான் அதை ஏற்க மறுக்கிறது..-
முகத்தில் அழகுக்கு மேலும் அழகு
சேர்க்க முந்திக் கொண்டு
வருகிறது...
முகப்பருக்கள்😍💓-
பெரிதாய் ஆசை என ஏதுமில்லை
என் ஆயுள் முழுவதும்
அனுதினமும் உந்தன்
அரவணைப்பில் உறங்கிட வேண்டும் என்பதை தவிர.. 💕-
இருக்கும் என்று நம்பியது
இல்லை என்று தெரிய வரும் போது
வலிக்க தானே செய்யும்....-
ஒரு நாளைக்கு நூறுமுறையாவது
உன் பெயரை சொல்ல சொல்லி
கேட்பாய்
நான் ஏன் என்று கேட்பேன்?
நீயோ!...
எந்தன் பெயர் அழகாவது
உந்தன் உச்சரிப்பில் தான் என்பாய் 😍-
கஷ்டமான சூழ்நிலையில்
மனசு கஷ்டமாக இருக்கும் போது
"யாருக்கு தான் இங்கு கஷ்டம் இல்லை"
என்ற நெனப்புதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு😌 💯-
பெரிய ஆசை என ஏதுமில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை!
ஆயிரம் ஆசைகள் எனக்கிருக்கு!...
அதிலே உனக்கு பங்கிருக்கு!..💙-
உன்னை அந்த அளவிற்கு பிடிக்கும்
எந்த அளவிற்கு என்றால்
நீயே என்னை உனக்கு
இந்த அளவிற்கு பிடிக்குமா?
என்று கேட்கும் அளவிற்கு பிடிக்கும்🤗-
முயற்சி செய்து கொண்டே
இருக்கிறேன்...
அதை மட்டும் தான்
விடாமல் செய்து கொண்டே
இருக்கிறேன்...-