Nagendran Palaniswamy   (நாகேந்திரன்)
104 Followers · 124 Following

read more
Joined 19 August 2018


read more
Joined 19 August 2018
28 APR 2023 AT 19:53

கரையோரப் பாறை நான்...
நுரையாடும் அலை நீ...

கட்டித் தழுவிய மறுநொடியே
விலகி விடுகிறாய்...
விலகிய துக்கத்தில்
விரைந்து எனைநோக்கி
ஓடிவருகிறாய்...

-


23 APR 2023 AT 20:20

இயற்கை என்னும் தூரிகை
வானமென்னும் வெள்ளைத்தாளில்
வரைந்த வண்ண ஓவியம்

வானவில்

-


8 MAR 2023 AT 9:09

தாயாக, சகோதரியாக,
மனைவியாக, மகளாக,
தோழியாக..

ஆண்களின் வாழ்க்கை
பெண்களோடு
இணைந்தே உள்ளது...

தாகம் தீர்க்கும் நதியாக,
சிவத்தை தாங்கும் சக்தியாக,
நம்மைத் தாங்கும் நிலமாக
ஆண் வாழ்வின் பின்புலமாக

பெண்ணே இருக்கிறாள்...

Happy Women's Day...

-


5 MAR 2023 AT 21:50

ஒரு கடின முடிவு
எடுக்கும் முன்
இம்மனம்
தன்னுள் கொள்ளும்
போராட்டங்கள்தான்
எத்தனை எத்தனையோ!!!

நீண்ட கால யோசனையின்
முற்றுப்புள்ளியே,
அடுத்த வார்த்தையோ!!!
அடுத்த வாழ்க்கையோ!!!
எங்கிருந்து, எப்படி
தொடங்குவது???

-


27 FEB 2023 AT 8:58

என்றோ, எங்கேயோ
சேர்ந்து கேட்ட பாடல்
இன்றும் கேட்க நேர்கையில்
அந்த தேவ கணங்கள்
அதே பூவாசங்களோடு
நினைவு வருவது
கைசேராத காதலின்
கைவந்த கலை...

-


18 FEB 2023 AT 11:44

இறைவனை
அவரின்
அசல் ஆலயங்களில்
காணுங்கள்...

போலி பிரதிகளில்
தேடாதீர்கள்...

-


14 FEB 2023 AT 10:13

இல்லாமல் போனது
ஜெஸ்ஸியோ, ஜானுவோதான்...

இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது காதல்...

-


3 FEB 2023 AT 6:40

காலம் கடந்து
கையில் கிடைத்த
நல்வாழ்வானது
பருவம் தவறி
பெய்த மழைபோல்
எந்தப் பயனும்
இல்லாதது...

-


21 JAN 2023 AT 23:28

காலங்கள் கடந்த பின்னும்
நீ விலகிப் போன பின்னும்
காதல் கொண்ட காலம்
இன்னும் காய்ந்துபோகாமல்
கனிந்து கொண்டேயிருக்கிறது...

காரணம் என்ன சொல்ல???
🤔🤔🤔

பூக்கடை மூடிய பின்னும்
பூவாசம் அங்கே உலவும்...
பெருமழை நின்ற பின்னும்
மரக்கிளை நீர்த்துளி தாங்கும்...
பாதங்கள் நடந்த பின்னும்
மணல்வெளி சுவடுகள் சுமக்கும்...
ஒலி பெருக்கியில் பாடல் முடிந்தும்
தேனிசை காதில் ஒலிக்கும்...
பிடித்த கதை படித்து முடிந்ததும்
காட்சிகள் மனதில் விரியும்...
எழுதிய கவிதை முடிந்த பின்னும்
ஏனோ இன்னும் இதயம் கனக்கும்...

-


12 NOV 2022 AT 16:10

ஊரெல்லாம் கனமழை...
சாலையெங்கும் வெள்ளநீர்...
நிரம்பி வழியும்
ஏரி, குளங்கள்...
உச்சி நனைய,
உடல் நடுங்கி
சாலையில் செல்லும்
மனிதர்கள்...

உள்ளுக்குள் நீங்காமல்
ஊற்றெடுக்கும்
தீயை அணைக்க
எந்த நீராலும்
இயலவில்லை...

-


Fetching Nagendran Palaniswamy Quotes