ராமனின் பார்வையில்...
காலம் வரை கருங்கல்லாய் - காத்திருந்து
உரியவன் உளியிட்டு
ஒலியிட்டு ஒளிபெறும்
சிலையே பெண்ணாவாள்
காதலின் காதலன்...-
சுவரறிந்த சேதி
சுவரறிந்த சேதி
ஊரறிய காத்திருக்கும்
ஊரறிந்த பின்
உற்றாரறிய வீற்றிருக்கும்
சான்றுகள் வெகுண்டெழுந்தால்
கணாளனை கலைத்திடுமே!
நெஞ்சக்குலை நடுங்குதடி.!
என் செய்வாய் நீ இனிமேல்?
ஆட்டத்தை குறைத்திடுவாய்-இல்லை
ஆட்டத்தை ஆடிடுவான்-அவனே
டிஜிட்டல் உலகம்...!
காதலின் காதலன்...-
பிறவிகள்
எந்த மடையன் சொன்னான் ஒரு மனிதனுக்கு ஏழு பிறவிகள் தான் என்று ?
நான் தினம் தினம் நூறு பிறவிகள் எடுக்கிறேன்
என் காதலி முறைக்கும் போது இறப்பும்
சிரிக்கும் போது பிறப்பும் மாறி மாறி நிகழ்கின்றன
அந்த மடையனையும் காதலிக்க சொல்லுங்கள் இந்த விந்தையை அவனும் உணரட்டும்
காதலின் காதலன்...-
காத்திருப்பு
காத்திருந்தேன் பல மணி நேரங்கள் காரணம் தெரியாமலே
தேடினேன் காரணம் நேரம் முடியும் வரை
இறுதியில் நீ வந்தாய் என் மனம் துள்ள
பிறகு தான் தெரிந்தது நான் பித்தனாய் காத்திருந்தது
உன்னை ஒரு நிமிடம் காணத் தான் என்று
காதலின் காதலன்...-
பிரிவு
பிரிவு என்பது தூரத்தில் மட்டுமே
மனதில் இருக்கும்
நினைவுகளில் அல்ல
காதலின் காதலன்...-
மதிமுகம்
கண்ணே உன் முகத்தைக்
கண்ட மறுநொடியில்-நான்
தலை குனிந்தேன் நாணத்திலல்ல
உன் மதி முகம் பகலிலும்-என்
கண்களை கூசியதால்
காதலின் காதலன்...-
ஆயுதம்
ஆண்களை உயிரோடு
கொல்ல பெண்கள்
பயன்படுத்தும் கொடிய ஆயுதம்
தான் புன்னகை
காதலின் காதலன்...-
காதல்
கண்ணே உயிரினும் மேலாக
நான் உன்னை காதலிப்பதால்
நீ பிடிக்காதென்ற
என் காதலையும் வெறுக்கிறேன்
காதலின் காதலன்...-
கண்ணீர்
கண்களால் கண்ட அவள் முகத்தை-அதன்
கண்ணீரால் அழிக்க முயன்றேன்-முடியவில்லை
அதிலிலும் அவளே வென்றாள்-காரணம்
அவள் முகம் பதிந்தது என் கண்களில்
அல்ல என் இதயத்தில்
காதலின் காதலன்...-
கல்லூரிக் காலங்கள்
கனவுகள் பல கொண்டு #கல்லூரி சென்றேன்
சி எஸ் இ எனும் #காகிதக்கப்பலேறி என் பயணம் துவங்க
முதல் நாள் கல்லூரியில் #தனிஒருவன் என நினைத்தேன்
நண்பர்கள் பலர் சேர #மௌனராகம் இசைத்தேன்
#இன்றுநேற்றுநாளை என வகுப்பறைகள் ஓட
காலத்தின் மாயத்தால் #அழகிய பெண்னொருத்தியை கண்டேன்
கண்ட மறுநொடியில் #சில்லென்றுஒருகாதல் கொண்டேன்
#காதலர்தினத்தன்று என் காதல் கூற
இல்லை #என்றொருக(சொ)ல்லால் என் காதலெனுமொருகண்ணாடியை உடைத்தாள்
மறக்க முடியாமல் #என்றும்அன்புடன் நான் அழுது நின்றேன்
நண்பர்கள் பலர் சேர்ந்து #திரிஷாஇல்லனாநயன்தாரா எனக் கூறி தேற்ற
#எங்கேயும்எப்போதும் என் காதல் மாறாதெனக் கூறி நின்றேன்
நண்பர்களுடன் #தோழிகளும் சேர்ந்து என்னை மகிழ்விக்க
மெல்ல மெல்ல #காதலில் இருந்து நான் மீண்டு வந்தேன்
#நான் என்ற வார்த்தைகள் நாம் என்று மாற
#பாயும் #புலி போல நான் எழுந்து நின்றேன்
ஆசிரியர் எனும் #கும்கிகளை கொண்டு நம்மை அடக்க நினைக்க
தனியாக சிக்குண்ட #கொம்பன் போல் அல்லாமல்
#மதயானைக்கூட்டங்களாய் நாம் எழுந்து நின்றோம்
பரிட்சைகள் எனும் #சாட்டைகள் கொண்டு நம்மைச் சுற்ற நினைக்க
தில்லுமுல்லு பல செய்து நாம் தப்பி வந்தோம்
காதலின் காதலன்...-