Nachu honey  
17 Followers · 11 Following

Joined 6 March 2019


Joined 6 March 2019
12 JAN 2022 AT 18:55

மறையும் வானவில்லாய் சந்தோஷம்...
ஏன்?
நீடிக்கும் வானமாய் சோகம்...
ஏன்?
விடை கிடைத்தது...
யோசிக்கும் மனநிலையை பொருத்தது என்று...

-


12 JAN 2022 AT 18:52

Life is all about how you face struggles and come back as an energetic soul

-


17 NOV 2021 AT 18:33

மழைத்துளி மறைந்திருக்கும்...
எதிர்நோக்கினால் ஏங்க வைக்கும்...
எதிர்பாராத நேரத்தில் எதிர்வினையாற்றும்...
மனிதர்களைப்போல!!

-


16 NOV 2021 AT 20:37

எல்லாம் தோல்வியல்ல...
மாறிய திசையில் சரியாக செல்வதே வெற்றி!!
விமானியாக நினைத்த ஐயா அப்துல் கலாமும் விஞ்ஞானி ஆனது
வாழ்க்கை திருப்பிய திசையில்
பயணித்ததால்தான்!!
மறுத்ததால் அல்ல!!!

-


12 JUL 2021 AT 16:42

இதய வானில் நட்சத்திரம் ஜொலிக்க
மூளை வார்த்தைகளை இடியாய் படபடக்க
உதட்டிலிருந்து மின்னலாய் வெட்டும் சொற்களை
பேனா மை வார்த்தைகளாய் சாரலிட
மழைத்துளியை தன்வசமாக்கிக் கொள்ளும் மண்ணாய்
காகிதம்.....

-


1 JUL 2021 AT 16:22

கவிஞனாக முயற்சித்தது போதும்
கவிதையாக மாறப் பழகு......

-


24 JUN 2021 AT 12:47

மற்றவரின் வாய்ப்பை
தட்டிப்பறிக்கும் முன்
நினைவில் கொள்
நீ சுவாசிப்பதே
கடவுள் கொடுத்திருக்கும்
வாய்ப்பில் தான்...

-


23 JUN 2021 AT 21:05

வேண்டுமென்றா செய்தேன்
வேண்டும் என்று தானே செய்தேன்
வேடிக்கையாய் செய்தது
வேதனையாய் முடிந்தது
மாங்காய் பறித்து மாட்டிக்கொண்ட
மழலைப்பருவம்....

-


23 JUN 2021 AT 20:25

சப்த ஸ்வரங்களின் கூட்டனியில்
ஆட்சியமைக்கும் இன்ப கானம்

-


18 JUN 2021 AT 18:47

நமக்கு பிடிக்காவிட்டாலும்
நமக்கு பிடிப்பவர்காக
ரசிப்பது

-


Fetching Nachu honey Quotes