நாடியம்பாள் மு   (நாடி)
242 Followers · 111 Following

read more
Joined 9 July 2017


read more
Joined 9 July 2017

என் மனம் மாறலாம்
உன்னை
அனுமதிப்பதும்,
நிறுத்திவைப்பதும்
எப்போதும்
என் கைகளில்
இல்லை.

-



எப்போதும்
சற்று மறைவாகவே
வைத்திருப்பதன்
மறுபெயர்தான்
விதியோ?

-



உன் நினைவையும்
தருகின்றது
ஏதோ ஒரு அமைதிதான்
உன் இழப்பையும்
நினைவுபடுத்துகின்றது.

-



உன்
தோள் சாய்கின்றேனோ...?!
இல்லை
அவசியத்திற்காக
உன்
தோள் சாய்கின்றேனோ...?!
தெரியவில்லை
ஆனால்..
இப்பொழுதெல்லாம்
உன் தோள்கள் என் கட்டாயத்
தேவையாகிவிட்டன.

-



நேரம் கரைவது
தெரிவதேயில்லை
உன் அருகில் மட்டும்....
உன்னை நேசிப்பதில்
பாசக்காரியாக
இருந்தாலும் கூட.,
உன் நேரத்தை திருடுவதில்
நான் பேராசைக்காரியாகவும்
சுயநலக்காரியாகவும்
மாறித்தான் போகின்றேன்

-



கோபத்திற்கும்,
விரோதத்திற்கும்
ஆயுள் காலம்
மிகக் குறைவுதான்.

-



என் வானத்தை நிரப்பும்
பறவையாக எப்போதும் உன் நினைவு இருக்கும் போது....
விண்மீன்களின்
இருப்பையும்,
மறைவையும் பற்றி எனக்கென்ன?

-



பெற்ற வரங்கள்தான்
தவமிருந்தவர்களைத்
தனியாகத் தவிக்க விடுகின்றனர்
"முதியோர் இல்லங்களில்".

-



சிங்காரமாய் வீற்றிருக்கும்
சிட்டுக்குருவிகளின்
குதூகலம்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
எள்ளளவும் இருப்பதில்லை.

-



என்பது
நப்பாசையினால்
நம்பியவருக்காக நாம் அடிக்கடி கொடுத்திடும்
அதிகபட்ச வாய்ப்பு.

-


Fetching நாடியம்பாள் மு Quotes