நான்   (செ.நடராஜன்)
13 Followers · 16 Following

Joined 10 January 2018


Joined 10 January 2018
16 DEC 2024 AT 7:17

நம்முடைய வாழ்க்கை சீராக செல்லும் போது இடைஞ்சல்கள் வர வேண்டும் இல்லை என்றால் நம் முன்னேற்றம் சிரமம் தான்...
நமக்கு வரும் இடையூறுகள் நமது முன்னேற்த்தின் படிகற்கள் என்று எப்போதும் செயல்படுவோம் ..

-


13 OCT 2024 AT 9:25

சோகத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை யாரிடமும் உளறி வைக்காதீர்கள்...

அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது..!!

-


4 JUL 2024 AT 11:25

மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் செய்யாமல் திறந்த மனசோட பார்த்தால் எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்

- ஜெயகாந்தன்

-


18 JAN 2024 AT 11:35

மனிதனின் ஆசைக்கு அளவு
என்பது இல்லை..
மற்றவர்களிடம் காட்டும்
உண்மையான அன்புக்கு
என்றுமே வயது ஒரு தடை இல்லை.. எல்லாவற்றையும் விட
நோ்மையான நட்புக்கு
இனம்,மதம்,சாதி என்று
எதுவுமே இல்லை..
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் தம்பி..

-


17 NOV 2023 AT 9:58

"கண்டிப்பு"
இது எல்லோர் இடத்திலும்
பிறந்து விடுவதில்லை. ..
உறவை தாண்டி உரிமையாக உள்ளவரிடமே பிறக்கும்..
அதை நாம் தான் சரியாக
புரிந்து கொள்ளாமல்
உதறி விடுகின்றோம் ...

-


13 OCT 2023 AT 7:52

நீ நினைக்கலாம் உன்னை
யாரும் கவனிக்க வில்லை
என்று..
ஆனால் உன் சிறு
அசைவுகளை கூட உற்று
நோக்கி கொண்டு இருக்கும் உன்னை நேசிக்கும் இதயம். .
உன்னுள் இருக்கும்
வித்தியாசம் அது அறியும்
நீ கூட புரிந்திராத
மாற்றங்களை..

-


7 SEP 2023 AT 18:48

மறக்க முடியாத குற்றங்களை
நாம் எப்போதும் மன்னித்து
விட பழகுவோம்..
நம்மை சுற்றி மன்னித்து
விடும் குற்றங்கள் நடந்து கொண்டே இருந்தால்
அதை நாம் மறந்து
விட பழகுவோம்..

-


31 AUG 2023 AT 20:39

இறுதி வரை இடைவிடாமல்
நீ போராடிக் கொண்டிரு
தோல்வியும் ஒருநாள்
தோற்று போகும்
உன்னிடம்..
பிறகு அறிந்து கொள்வாய்
நீ
யார் என்பதை...

-


28 AUG 2023 AT 21:54

ஒரு அடி முன் எடுத்து
வைக்க தயங்குபவன்
எப்போதும் கை தட்டுகிறான்..
அடியெடுத்து வைக்க துணிந்தவன் அந்த கை தட்டல்களை வாங்குகிறான்

-


28 AUG 2023 AT 7:24

உங்களுக்கு வரும் பிரச்சனைகள் தான் வாழ்வின் ழுழு
அத்தியாயம் என்று நினைத்து இருந்து விடுகிறீர்கள்..
அது அந்த அத்தியாயத்தில்
வரும் ஒரு பகுதியின்
ஒரு பக்கம் மட்டுமே..
சீக்கிரம் புரட்டி விட்டு
அடுத்த பக்கத்திறக்கு
செல்லலாம் வாருங்கள்

-


Fetching நான் Quotes