தனிமையே போதும்
🙏🙏🙏
போதும்-
வயதுக்கு கொடுப்பதை விட
அவரவர் செயலுக்கு
கிடைப்பது தான்
உண்மையான
" மரியாதை "-
வெறும் பேச்சு வார்த்தை மட்டுமல்ல
நம்மை ஈன்றவளின் மொழியறிந்து
நம்மை யாரென , நமக்கே உணர்த்தி
கருவறையில் வசித்ததற்கான
அங்கீகாரம் தந்து
காலம் முழுக்கத் தொடரும்
நம் அடையாளம்-
உலகிலேயே
அதிகமாக பூக்கும்
ஒரே பூ "" நட்பு ""
முடிந்த வரை
அதை உங்கள் மனதிலும்
பூக்க வையுங்கள்
வாழ்க்கை அழகாகும்-
நெருங்கி வந்து நெஞ்சை வாட்டினால்
அது காதல்
நெருங்கி வந்து நெஞ்சில் தீமூட்டினால்
அது காமம்
நெருங்கி வந்து நெஞ்சைக் காப்பாற்றினால்
அது நட்பு
அது தான் "" நட்பு ""-
புன்னகையோடு பூத்து உதிரும்
பூக்களாய் இருந்து பாருங்கள்
எதுவும் கடந்து போகும்-
உனக்கும் எனக்குமான
தூரம் தான் அதிகமே தவிர
உன் மீதான பாசம்
என்றுமே குறையாது-
இமைகளும் விழியும் போல
என்றும் நீங்காமல்
உன் கரம்பற்றி காதல் சொல்ல..
காலமெல்லாம்
நான் காத்திருப்பேன்
உன்( நம்)காதலை எதிர் பார்த்திருப்பேன்-
கொஞ்சி விளையாடும்
மழைத்துளியாய்
அவள் காதோடு கதை பேச
காதல் கொண்டனவோ
காதணிகள்
-