வரும் போதே
சிரித்த முகத்தோடு
ஓடி வந்து
நீண்ட கைகளில்
அணைத்து
நலம் விசாரிக்கும்
அன்பில்
நலம் வாழுது உலகம்...
அணைத்துக் கொள்ளும்
தோள்களும்
பற்றிக் கொள்ளும்
கைகளும் தரும்
பலமும் அன்பும் தானே
இந்த வாழ்க்கையை
நகர்த்துகிறது.
மே 13.2025
-
"தமிழும் நேசமும் ஊன்றுகோலாய்க் கொண்டு
உற்சாகமாக உலா வருபவள்"
"கனவுகளையும்... read more
அர்ப்பணிப்புடனும்
அன்பான அக்கறையுடன்
முகம் சுழிக்காமல்
மனமுவந்து உதவும்
செவிலியர்கள் அனைவருக்கும்
இனிய வாழ்த்துகள் 🔥✨
உங்கள் பணி தலையாயது...
தலை வணங்கத் தக்கது....
கீழே தொடருங்கள்.....👇🏾👇🏾-
சுழலாதவனுக்கும்
சேர்ந்தே
சுழலுகிறது
பூமி...
எதுவுமே
இல்லாதவனுக்கும்
இருக்கிறது
காலம்...-
வினாவுக்கும்
விடைக்கும்
இடையில் நின்று
பாலைவனத்தில்
நீருக்கு தவிப்பது போல
அல்லாடுகிறேன்...
விளக்கம் காணாமல்...
விளக்கம் விளக்கம்
என்று பல தெரிந்தாலும்
அவை வினாவிலேயே
வந்து நிற்கின்றன....
இதை விளக்குவார் தான்
யாரோ...?!-
"சரி பாத்துக்கலாம்"
என்று
யார் சொல்வதை விடவும்
அவள் சொல்வது
எனக்காறுதல்
உண்மையாகவே...
ஏனெனில்
‘எல்லாம் அறிந்தவள் அவள்'
எனது இப்போதைய எல்லாம்...-
மாதா மாதம்
உதிரும் இரத்தப் போக்கில்
உலர்ந்து போகும்
உடல்...
அதனினும் மேலாய்
மாதம் பத்து சுமந்து
சிசுவை பெறுகையில்
உயிரற்றுப் போகும்
உடல்...
அத்தனைக்குப் பிறகும்
உயிர்ப்புடன் வருகிறாள்!
அதனால் தான்
உயிர் ஆற்றல் பெண்!
உலகின் உயர் ஆற்றல் பெண்!-
ஆட்டுக்கிடை
மாட்டுக்கிடை
நாய் கிடை போல
மனிதனுக்கும்
அவன் வீடு
கிடை போலாகும்
அவன் வெளியே வர
இயலாத போது....-