காதலை மறக்காதே!
மறக்க நினைப்பது மடமை..!
ஓட நினைப்பது கொடுமை!
இயக்கத்தை நிறுத்தாமல் இயங்கு..!
அன்பொலி ஒன்றை மட்டுமே
இயக்கு!
நான்கறை கொண்ட நண்பா!
யாராவது காதலை மறக்கச்சொன்னால்
ஓங்......கி அறைந்துவிடு!-
Native of Madurai
அன்போடு வாழுங்கள்..!
அன்பிலார் உடம்பு எலும்பில்லா
உடம்பாம்!
அன்பிற்கு தாழ்ப்பாள் கிடையாது..!
அன்பு அற்றம் காக்கும் கருவியாம்!
அன்புடையார் எல்லாம்
உடையவராம்..!
நான் சொல்லவில்லை.
வள்ளுவர் சொன்னது.
கொரோனா பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது..!
பணம் பணம் என்றே பரிதவித்து
அழையாதீர்.
போகும் போது ஒரு முடியைக் கூட கொண்டு செல்ல முடியாது.
கோடானு கோடி வைத்திருக்கும்
அம்பானிக்கும் இதே நிலைதான்.
இளமை, அழகு, பணம் எல்லாமே
நிலையற்றது..!
இரண்டு பேராது இதை வாசித்து
உணர்ந்தால் நான் பெருஞ் செல்வந்தனாவேன். உதவுங்கள்
உயிர் உள்ளவரை..!
-
dispersal of a seed in a flowing water, to start a new life.
-
என் எண்ண மை கொண்டு
எழுத எழுத
அதுவும் நம் காதலைப் பற்றி
எழுத எழுத
இடம் போதவில்லையடி..
சகியே..!
புத்த கவி-
இருந்தது உலகம்..!
பூநாகமாய் அழித்து வருகிறது..!
பண முடக்கத்தோடும்
வீட்டுக்குள் முடக்கத்தோடும்
உறவுக்குள் முடக்கத்தோடும்
நட்புக்குள் முடக்கத்தோடும்
வெளியே செல்ல முடியாமல்
கால் முடக்கத்தோடும்
கரோனா ஒரு வழி பார்த்துக்
கொண்டிருக்கிறது..!
நாம் மாற்று வழி தெரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறோம்!-
ஒன்றா இரண்டா...!
காதல் ...தவறு என்கிறது
ஒரு கூட்டம்..!
காதலே உலகம் என்று
போராடுகிறது
ஒரு கூட்டம்...!
எலும்பில்லாத நாக்கு
எப்படி வேண்டுமானாலும்
பேசும் என்கிறது ஒரு கூட்டம்..!
அடக்கம் அமரருள் உய்க்கும்
என்கிறது ஒரு கூட்டம்...!
குடி குடியைக் கெடுக்கும் என்கிறது
ஒரு கூட்டம்...!
குடித்தே சீரழிக்கிறது ஒரு கூட்டம்..!
-
நண்பா என்னை ஏன்
தேர்ந்தெடுத்தாய்....?
நட்புக்கு இலக்கணம்
வகுத்தேனில்லை..!
நயம்பட உரைத்தேனில்லை..!
குடி கூடாதென்றேன்..!
கோபித்துப் பிரிந்தனை..!
நீ இல்லாத உள்ளம்
நிலவில்லா வானமாயிற்று..!
பிரிவாற்றாமை
பிரளயமாயிற்று...!
உன் நன்மைக்காகத்தானே
சொன்னேன்...!
வருந்தி திருந்தி வந்துவிடு
நண்பா...!
புத்த கவி-
ஆதாரம்
வாழ்வின் ஆதாரம் கல்வி..!
கல்வியே நம்மைக்
காக்கும்!
காத்தலால் அது
கண்ணாகுமாம்!
கண்ணான குடும்பம்
கருப்பட்டி வெல்லமாம்.
எறும்பென்னும் துன்பம்
அதனை மொய்க்காமல்
காப்பதுநம் கடமையாம்..!
-
நிம்மதியான தூக்கம்.
அன்புநிறைந்த சூழல்.
விட்டுக்கொடுத்து வாழும் மனம்!-