Muthumaran Muthusamy   (பிரியமுடன் மாறன்)
34 Followers · 2 Following

Joined 11 July 2017


Joined 11 July 2017
16 AUG 2024 AT 9:05


கொண்டாட்டங்கள் என்பதெல்லாம்
கொண்டாடும் வரை மட்டுமே.

சில பல காலம் தான்
சில மணி நேரம்தான்
மனிதனுக்கும் பொருந்தும்.
வாழ்க்கை அது அப்படித்தான்.

#முகமன்

-


20 NOV 2023 AT 23:11

முற்றிலும் உடைந்திருக்கும்
போது உங்களால் சிரிக்க முடிந்தால்
அடுத்த முறை உங்களை
உடைக்க எதுவும் இல்லை

-


6 NOV 2023 AT 14:52

மனம் விட்டு அழ
உங்கள் மனமே
எப்போதும் காத்திருக்கும் போது
விரும்பாதவர்கள் மனங்களை ஏங்கி
ஏன் வெந்து சாகிறீர்கள்???

-


6 NOV 2023 AT 14:26

நம் வலிகளைத் தேற்றுவது
நம் கண்ணீர் அல்ல.
அந்த நேரத்துப் போலியான புன்னகை.

~

-


22 SEP 2022 AT 8:34

அவரவர்கள்
அப்படியே தான் இருக்கிறார்கள்.
நீங்கள் தான்
மாறி மாறி
உங்களைக் குழப்பிக்கொள்கிறீர்கள்...

-


19 SEP 2022 AT 21:55

மிகச்சரியாக நடப்பவர்களுக்கு தான்
'திமிர் பிடித்தவர்கள்‌' என்ற பெயர் பொருந்தும்...

-


19 SEP 2022 AT 21:43



என் இரைச்சல்களை மட்டும் பார்த்தவர்களுக்கு
என் அமைதி
சற்று வித்தியாசமாக தான் தெரியும்.

-


19 SEP 2022 AT 21:29

தேடுபவர்களிடம் மட்டும்
தஞ்சமாகுங்கள்.
தேடாதவர்களிடம்
நினைவில் கூடச் செல்லாதீர்கள்.

-


11 SEP 2022 AT 9:30

முத்தங்களை விற்று
வெட்கங்களைப்
பெற்றுக்கொள்ளுங்கள்
மகள்களிடம்...

-


28 AUG 2022 AT 5:43

அணுவணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தப்பிறகு
காதல் சரியான வழிதான்

- அறிவுமதி

-


Fetching Muthumaran Muthusamy Quotes