குயிலோசையும்
குழலோசையும் கூட
பிழையாக தோன்றும்
என்னவள் குரலோசை கேட்டால்...-
நா.முத்துக்குமாரின் சீடன்
வைரமுத்து வரிகளின் காதலன்!😍
பாரதி மீது பைத்த... read more
ஒற்றைக் கிளையில்
ஒய்யாரமாய்
யாருமில்லாமல்
தானே ஆடித் திரிகிறது
காற்று அசைத்துவிட்டு போன
ஊஞ்சல் பலகை-
யார் யாரோ
புன்னகையுடன் கடந்து சொல்லும்
என் வாழ்க்கை
உன் ஒருத்தியின்
முகத்தை தான்
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறது.-
காதல் என்ற வார்த்தையை
கேட்கும் போதெல்லாம்
உன் முகம் தான் நினைவுக்கு வருகிறது!
நானறிந்து நீ தானே காதலின் உருவம்.-
ஒரு ஒற்றை புகைப்படம்
ஒரு கண்ணீர் பிரவாகத்தையும்
அவளுடனான நினைவுகள்
அத்தனையும்
ஒரு நொடியில் ஊற்றெடுக்கச் செய்கிறது-
முதலில் உன் அருகாமை
பின் உன் வாசனை
அதன் பின் உன் குரல்
இப்போது உன் முகம்
இப்படியாக எல்லாம் அழிந்து போன
என் மூளையில்
இன்னமும் ஏதோ ஒன்று
உன்னை பற்றி ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஓ! ஒரு வேளை உன் மீது நான் கொண்ட காதலோ!!-
ஒருதலை காதல்
சிரமப்பட்டு நான் கோர்த்த
வார்த்தைகள் எல்லாம்
சிதறியது,
நான் அப்படி பழகலடா
என்ற அவளது வார்த்தையில்...-
சாரல் மழை
வாசல் தெளிக்க வருகிறாள்!
அவளுக்கு முன்பே
வாசல் தெளித்து
அவளுக்காக காத்திருக்கிறது
சாரல் மழை.-
கடைசி இலை
எல்லா இலைகளும் உதிர்ந்த பின்னர்,
காற்றின் வருகைக்காக காத்திருக்கிறது,
அந்த மரத்தின் கடைசி இலை!-