மெய்யுண்டு
மெய் தான் எங்குமுண்டு..
பொய் பொய்த்து போனபின்னே
மெய் தான் மேலோங்கும்..
இறுதியில்
மெய்யே நிலைத்திருக்கும்....-
பிறந்தது பாண்டிய நாட்டில்,
வளர்வது சோழ நாட்டில்
இளங்கலை திருச்சிரா... read more
உடலுள்ளமுயிர்
மட்டுமல்ல..
அதையும் தாண்டியதொரு
தொடர்புண்டு.! அது யாருடனானது..?
கருணையின் பிடியிலுண்டானது..!?
மனிதன் மண்ணாலானது என்றாலும்
விண்ணக அரசனின் பேரொளியாலானது..!?-
சென்றிடுவோம் ஓர்நாள்..
அந்நாளை அடைந்திடும் முன்னே
அகிலமெங்கிலும் உன் ஆன்மாவை
பதியச் செய்திடு..
இறுதிவரை உன் பெயர்
முழங்கிடும் வேளையில்
உன் கொள்கையும்
பதியட்டும் அவர்களின் வாழ்வியலாக..!
-
இரை தேடிடும் வேளையில்
அடைந்து கொண்டேன் இறையை...
ஒவ்வொரு கவளத்திலும்
கருணையாளனின்
அன்பை உணர்ந்து கொண்டேன்..
-
அன்பினை சுமந்து
அகிலமெங்கிலும் தேடி அலைந்தேன்..?
என் இறைவா.! இறுதியில்
என் இதயச் சிறையிலேயே
உன்னை அடைந்து கொண்டேன்...-
எதையும் வென்றிட முடியும்.!!
உம்மொழியிலே கொல்லும் சொல்
உண்டெனில்
நீ வீழ்வதிலும்
அதுவே காரணமாய் திகழும்.?!-
நெருப்பும் நீரும் போல,
கோடையும் தென்றலும் போல
இரு வேறு துருவங்கள்..
கொன்றவன் வீழ்வான்
வாழவைப்பவனே வாழ்வான்..
வாழு வாழவிடு
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல்..!-
விடியும் முன்னே
வித்தகனை அடைந்திடும் முயற்சியில்
ஓர் இரவு...!
வையகமும்
வானகமும்
அடக்கியாளும் ஓரிறையை
தன்னுள்ளே அறிந்திடும் பயிற்சியில்
ஓர் இரவு...!
-
இயன்றவரை முயலுகின்றேன்
இதுநாள் வரையிலும்
உன் எண்ணம் தான்..!
இறுதி மூச்சுவரை
உன் நினைவிலே மடிவதற்கு
அருள் தருவாயே ரஹ்மானே..!
-
ஒரு பேரிச்சை
ஒரு பாட்டில் தண்ணீர்
ஒரு கோப்பை நோன்பு கஞ்சி
இரண்டு சமோஷா
இரு டம்ளர் சர்பத்
வெயிலின் தாக்கம்
கொடுமை என்றாலும்,
நோன்பின் சுவை
இவைகளை தாண்டியே..
உண்ணா நோன்பு
இறைவனின் அன்பை
பெற உதவும் கேடயம்..
-