Chelangalaaaa
-
சீறிப்பாயும் காளையை அடக்குவது வீரம் அல்ல
அலைபாயும் மனதை அடக்குவதே வீரம்..
# மனதுடன் போர் செய்-
உந்தன் கண்களில் எந்தன் பிம்பம் காண்வேன்..
நிமிடங்கள் கடந்தும் இமைக்காமல் பார்ப்பேன்..
உன் விழி போடும் கடிதங்களோ மொழியின்றி
நான் படிக்கும் என் வாழ்நாளின் சந்தோஷங்களோ..
நொடி நொடிக்கு உந்தன் நினைவலைகள் தீண்டும்
என் இன்பங்கள் யாவும் நீ மட்டுமே
நீ செய்யும் செய்கை நான் ரசிக்க தினமும்
என் சந்தோஷ நாளில் முதல் நிற்குமே..
# காதலனும் 🏹💙 காதலியும்..-
சிரிப்பின் சிற்பம் அவள்..
மகிழ்ச்சியான தருணத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு ஆர்ப்பரித்துக் கொண்டு வரும்..
ஆனால் அனைத்து விதமான சிரிப்பிற்கு பின்பும் மகிழ்ச்சி இருக்கும் என்று எண்ணி விட முடியாது காயங்களையும் கண்ணீரையும் மறைக்கும் திரையாக வரும் சிரிப்பும் இங்கு ஏராளம்..
ஆசையை புதைத்து,அழுகையை அடைத்து,மனம் வெதும்பி, எச்சில் விழுங்க தொண்டை கதவை திறக்க முடியாமல், மீன் மீன்வலையில் மாட்டி திணறுவது போல் கண்கள் அங்கும் இங்கும் திணற,குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் அதிர்வலைகள் போல உதடுகளில் சில அதிர்வலைகள் ஏற்பட,நான் இயல்பாக உள்ளேன் என்று கைகள் தன்னை அறியாமல் முடிகளை கோத, பல படிக்கட்டுகள் ஏறாமல் இருந்த இடத்திலே மூச்சு வாங்க, நான் நிதானமாக உள்ளேன் என்று இதழ் கூறும் ஒரு வினாடி சிரிப்புக்கு விலையும் இல்லை அச்சிரிப்புக்கு முழு பொருள் கூற இங்கு ஒருவரும் இல்லை..
ஒரு சாதாரண சிரிப்பிற்கு சொந்தக்காரி அல்ல அவள்.
சிரிப்பு என்பது ஒரு உணர்ச்சி அதற்கு உருவமில்லை அதையும் மீறி ஒரு உருவமிட்டு பார்த்தால் என்ன என்று மனம் சிந்தித்தால் அச்சிரிப்பிற்கு உருவமும்மிட்டால் வருவது அவள் முகம் அதனாலே சிரிப்பின் சிற்பம் அவள்..
அப்பேர்ப்பட்ட அவளின் சிரிப்பிற்கு ஒரு துளி அர்த்தம் புரிந்து கொண்ட பின் அவள் இயல்பாக சிரிக்கும் கள்ளமில்லா சிரிப்பை பார்த்தபின் மனம் கள்ளுண்ணாமலே கவிபாடும்..
-