பிரிய நினைத்தாலும்,
சேர்ந்தே இருப்பதில்லையே.
-
நீங்காத புன்னகையில் நான் திளைத்திருக்க நான் விரும்பவில்லை.
ஏனென்றால்,அதற்கு நாம் ரொம்ப மெனக்கிட வேண்டும் அது நம் இயல்பை சிதைத்து விடும்.
இங்கு எதுவும் நிலையில்லை.
ஆதலால்,இன்பம் வரும் பொழுது நீடித்திருக்கனும்னு நினைக்கல,துன்பம் வரும் போது அது விலகிப்போனும்னும் நினைக்கல.
எது வரினும் ஏத்துப்போம்,
அனுபவிப்போம்,கடப்போம்....-
விரக்தி மட்டும் இல்லை
விடுதலையும் இருக்கிறது.
சோகம் மட்டும் இல்லை கொஞ்சம் சுகமும் இருக்கிறது.
நிம்மதி பெருமூச்சுடன் சற்று கூர்ந்து கவனித்தால்-
உழைப்பதினால் களைத்துப்போகும் போதெல்லாம் தூக்கத்தில் திளைத்து,
சிந்தனைகள் முளைத்து,அடுத்த வேலையை நினைத்து மலைத்து பின் சளித்துப்போய்தான் வேலை செய்கிறேன்.-
ஆம்,சிந்தித்ததை,பார்த்ததை,
பழகியதை,பேசியதை,இப்படி என் செயல் அனைத்தையும் எழுத ஆசை.
ஆனால்,இன்னும் எழுத முடியவில்லை.காரணம் என்னவென்று பார்த்தால் எழுத சோம்பேறித்தனமேயன்றி வேறில்லை.-
பேரண்டத்தின் மீச்சிறு துகள் நான்,
வானத்திற்கு கீழ் நாம் அனைவரும் சமம் என உணர்ந்தவன் நான்,
தெரியாததை தெரிந்து என் விலங்கறுத்து,
பிறருக்கு சில விளங்க வைத்து,
நான் வாழ்ந்த அதிர்வை கொடுப்பேனே🧘
-