I hurt myself often, not only by
expectations but also by my misunderstanding and overthinking.....-
கண்கள் கண்டுகளிக்க கலையாய் நீ,
காதுகள் கேட்க பாடலாக நீ,
உதடுகள் வாசிக்க கவிதையாய் நீ,
இதயம் உணர உணர்ச்சியாய் நீ,
நினைவில் மறைகிராய் மறதியாக.-
எல்லையற்ற வானம் போன்ற என் வாழ்க்கையை உன் மௌன கருமேகத்தால் நீ சூழ்ந்து கண்ணீர் மழையை வரவழைத்தாலும், சில நொடிகள் மட்டும் தோன்றும் வானவில்லைப் போல உன் மௌனத்தை உடைத்து உன் வார்த்தைகளால் என் வானிற்கு வண்ணம் சேர்த்து, மீண்டும் சூரியனாய்ச் சுட்டெரிக்கிறாய் உன் மௌன கதிர்வீச்சால்.
-
வெண்மையின் அமைதியையும், சிவப்பின் ரௌதிரத்தையும், கருமையின் விரக்தியையும் கண்டுவிட்டு உறங்கச் சென்றாலும், குருடனாக விழிக்கின்றேன் உன் மௌன உலகில்.
-
மௌனம் ஒரு மொழியானால்.,
உந்தன் இதழின் அசைவுகள் சொற்களாய் உருவெடுக்க,
கண் சிமிட்டலில் அச்சொற்களுக்கு உயிர்(பொருள்) கொடுக்க,
உந்தன் காற்சிலம்பின் ஓசை இசையாக ஒலிக்க,
உன் நாணத்தால் அச்சொற்களுக்கு மெருகேற்றி,
காற்றில் பறக்கும் உந்தன் கூந்தல் இலக்கணத்தை வீச,
நீயே நிற்பாயடி மௌனம் என்னும் மொழியின் உருவாய்.
-
எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் நிழலை பின்தொடர்ந்து திசைமாறிச் செல்கின்றன, ஒரு நாளாவது உன்னுடைய நிழலை போல உன்னுடன் நடக்க மாட்டோமா என்று...?
-
உந்தன் கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் கலையாக மாற்றுவேன், கண்மணியே கண்களால் நீ கட்டளையிட்டால்.
-
Ok...here we are,at the end of another tedious year 2018. Wish you all a successful year ahead. Wait...what ? Success... is that what life is meant for. At the end of your life, the only thing that matters is whether you have spent your life happily or not. If not all your success becomes nothing. So start being happy atleast for the rest of your life. To be happy, just start complimenting everything that you see, hear, feel from the time you start your day. Start loving yourself and everything around you. Try to live your life to the fullest and enjoy each and every moment of your life. Wishing you all the happiest year ahead. Let this year 2019 bring you and your family great joy and happiness.
-
அழகிற்கே அழகு சேர்க்கும் பேரழகாகிய எனதழகின் நாணத்தை விட சிறந்த பொருள் அழகிற்கு உண்டோ?
-
நானும் ஆனேனடி கம்பனாய், காப்பியம் போன்ற உன் பெயரை என் இதயத்தில் எழுதியதால்.
-