Mohamed Ali   (லி.முஹம்மது அலி)
55 Followers · 128 Following

Joined 11 January 2018


Joined 11 January 2018
18 NOV 2021 AT 14:29

என் ஜீவன்
முழுவதையும்
எடுத்துக்கொள்!

ஒரு துளி
காதலை மட்டுமாவது
கொடுத்து விடு!

-


18 JUL 2021 AT 18:21

பயணம் தொடர்கிறது,
மரணம் எனும்
ஊர் நோக்கி!

-


20 JUN 2021 AT 21:28

கற்பனைகளை
தேடிய பயணத்தில்,
கண்முன் இருக்கும்
நிஜங்களை
கொண்டாட தவறி விடுகிறோம்!

-


23 FEB 2021 AT 13:07

சில்லறை விலைக்கு
வாக்குகளை வாங்கி
மொத்த விலைக்கு
விற்பதற்கு பெயர் தான்
நவீன ஜனநாயகம்!

-


2 DEC 2020 AT 1:52

காலம் எனும்
நீரோடையில்,
கனவுகள்
கரைந்து போகின்றன,
லட்சியங்கள்
காணாமல் போகின்றன,
தேவைகளும் கடமைகளுமே
எஞ்சியிருக்கின்றன!

-


25 SEP 2020 AT 0:11

புயல் காற்றை
குடுவைக்குள்ளோ,
சமுத்திரத்தை
குவளைக்குள்ளோ,
அடைத்திட முடியாது,

ஆனால்,

குட்டி இதயத்திற்குள்
அடைபட்டு விடுகிறது
காதல்!

-


4 AUG 2020 AT 22:47

முழு அடைப்பு
நீட்டிப்பு

கனவுகளுக்கும் சேர்த்து!

-


4 AUG 2020 AT 18:09

சுடராய் முளைத்து
முழுதாய் படரு,
அனைந்து விடாதே

என் உள்ளத்தீயே!

-


8 JUL 2020 AT 20:11

ஆயிரம் தத்துவங்கள்
படித்தாலும்,
நோக்கமிருந்தால் தான்
தாக்கமும் இருக்கும்!

-


8 JUL 2020 AT 20:04

உன் இதயம்
எனும் குட்டித் தீவில்
காதல் அகதியாய்
நான்!

-


Fetching Mohamed Ali Quotes