மழை பாரதி   (மழைபாரதி)
26 Followers · 69 Following

Joined 22 May 2024


Joined 22 May 2024

உலகம் நீயென்று
புறப்பட்டவர்கள்
காணவில்லை
மறுபடியும்
யாரையோ
உலகம் என்று
புறப்பட்டனரோ....

-



வீடு வளர்த்து தருவோமா
ஒன்றாய் வாருங்கள்
விதையிடுவோம்
நாளை
பறவைகள் விதையிடும்
நம்மை வளர்க்கும்..

-



வரனுக்காக கட்டிய தூண்களோ,
ஆயிரம் தாலியுடன்,
புதுமைப் பெண்கள்....

-



உயிர் போகும் கடைசியிலும்
தாத்தா மாறவில்லை
அடகு வைக்காத தண்டட்டி

-



இன்னும் சிலரால்
கற்புக்கரசி தான்
காவல்துறை...

-



இதயமும்
தேர்தலும் ஒன்று
கள்ள ஓட்டு...

-



இக்கால உடன்போக்கு
"பிறர் மனை நோக்கல்"

-


YESTERDAY AT 7:24

அவள் பொக்கிஷம்
அவள் அமைவது வரம்
வரம் தருபவள் அவளே
பெண் யாவருக்கும் தாய்
அவளை நேசிப்போம் சுவாசிப்போம்
உண்மையான இதயத்துடன்,
பிறர் மனை நோக்காது...

-



துரியோதனனுக்கு கர்ணனாய்
ஏழைகளுக்கு
அட்சய பாத்திரம்
அண்ணாவின் சேவை

-



மலைகளை காக்கும்
குமரித் தமிழன்
முருகன்

-


Fetching மழை பாரதி Quotes