ஏங்கித் தகிக்கும்
ஏகாந்த நாளில்.,
என் சுயஞ் சூரையாடும்
நின் சூரியச் சிரிப்பில்
வெம்பித் திமிர்வதே
தீராக் காதல்!-
எட்டுத்திக்கும் எட்டிச்சென்றாலும்
தாய்க்கும் தாய்மொழிக்கும்
பற்றோடிருத்தலே இப்பிறவிப்பயன்!-
தீர விசாரிப்பதற்காய்
நம் இதழ் சண்டையில்
இடைப்புகும் நுன் திடீர்
விழிக்காவலாளிகளால்
தவிர்க்கப்படுகின்றன
லிப்லாக் டெத்கள்!
-
பாதித் தூக்கத்தின் விளிம்பிலேனும்
மீதி முத்தத்தையும் விளம்பிவிடு!
விடிவதற்குள் விளங்கட்டும்
இச்சந்திரயிரவின்
சாராம்சம்!-
அறிந்த முத்தங்கள்
சிறு ஆயிரமிட்டு.,
நம் ஆயுளும் சேர்த்தே
கூட்டுவோம் வா!-
வேகமாய்க் கடந்த பின்னர்
நீ நழுவவிட்ட மென்சிரிப்புகள்
உரைக்கும் பொழுதோ.,
ஆக்ஸிடோஸினின் அளவு கூட்டும்
கூகுள் தேடலைத் தவிர்த்து
வேறென்ன நான் செய்ய!
-
பசுமை பாசான்களின்
காதல் குளிர்ச்சியில்
நனைந்து நெகிழ்கிறது
நின் நினைவுத்
தவளைகள்!
-
உன்னில் வீழ்ந்த பின்
பகிரப்படும் என்
வெட்கங்கள் யாவும்
வடிவங்களுள் அடங்காத
வாஞ்சையின் வார்ப்புகள்!-
கட்டியுறங்குகையில்
காது மடல் தீண்டி
பின்னங்கழுத்தின்
பாதி வரை சென்று
ஜீவன் புதுப்பிக்கும்
உன் மூச்சுக்காற்றின்
வெப்பச்சுவடுகள்.,
அடிக்கும் வெயிலிலும்
ஆத்மார்த்தமானவை!-
தேடலுக்கான வழிப்பாதையில்
தேங்கிக்கிடக்கும் வினாக்களுக்குத்
தோதான விடைவொவ்வொன்றின்
தேர்விலும் உன் விருப்பிற்க்கான
தேடலும்!
-