எங்கெல்லாம் சுற்றி திரிகிறேனோ
அதையெல்லாம்
உன்னிடம் தெரியப்படுத்தி
அதனோடு
ஒரு "மிஸ் யூ"வும் சொல்ல ஆசை -ஆனால்
அது நிராசையும் கூட.
Wherever I roam
I want to let you know all that places
And I want to add "MISS YOU" that
you are not with me in those places.
I know It's an unfulfilled desire.-
நான்
உறங்கிக் கொண்டிருக்கையில்
மேசையில் மூடி வைத்திருந்த
புத்தகம்,
வீசிய காற்று
அதன் பக்கங்களை
வேகமாய் புரட்டிப்போட்டு படித்துக்
கொண்டிருக்கிறது.-
அடிக்கடி மகனுக்கு வரும்
தபால் கடிதத்தில்
ஏதேனும் ஒன்றாவது அரசு பணிக்கான
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்-ஆக
இருக்காதா? என்பதில்
பெற்றோர்களின்
அதீத ஏக்கம் புதைந்து கிடக்கிறது.-
உன் பெயரின் மீது
எத்தனையோ முறை
எச்சில் துப்பியதுண்டு...!
என் சருமத்தில்
உன் பெயரை கிறுக்கி
அழிக்கும் போதெல்லாம்....!-
ஆகாயகங்கை பொழிகிறது.
அம்மியின் விளிம்பில்
உடைத்த
தேங்காய்த்தண்ணீரை,
அனிச்சையாய்
ஆஅவென அவள்
அண்ணாந்து பருகையில்..!-
ஒற்றை பதிலுக்காக
காத்திருக்கிறேன்.
ஒற்றைக்காலில்
அடம் பிடிக்கிறாள்.
ஏன் ஒற்றை விரலிலும் கூட
நின்று அடம் பிடிப்பாள்.-
Knowing where I lost her,
Still I'm wasting my life looking for her again.
First love is completely conflict.
உன்னை எங்கே தொலைத்தேன்
என தெரிந்திருந்தும் -மீண்டும்
உன்னைத் தேடுவதிலேயே
வாழ்க்கையைத் தொலைக்கிறேன்.
முதல்_காதல்
முற்றிலும்_மோதல்.-
வீட்டின் முன் கரையும்
காகம்
உன் வருகையை ஓலமிடுகிறது.
நிற்காமல் செல்லும்
பேருந்து
நீ இன்னும் வரவில்லை என
கலக்கமடையச் செய்கிறது.-
எனது மணிக்கட்டின் இன்னொரு
நாடித்துடிப்பு
அவள் பரிசளித்த "கைக்கடிகாரம்".
Another pulse of my wrist,
The "Wrist Watch" she gifted.-
காது கேட்காத தாத்தாவை
'தாத்தா' 'தாத்தா'
என கத்தி அழைக்கும் பேத்திக்கு
செவி கொடுக்காத தாத்தாவினால்
வழியில் சென்ற நான்
எதேச்சையாய்
செவி கொடுத்ததால் அங்கனம்
என்னை "தாத்தா" வாக ஆக்கினாள்.
"ஓ நீங்க தாத்தா-வா,
அப்புறம் ஏன் திரும்பி பாக்குறீங்க"
எனும் கேள்வியில்.-