சில கனவுகளை நிஜமாக
எண்ணி மகிழ்வதும்...
பல நிஜங்களை கனவாக
எண்ணி மறப்பதும் மட்டும் ...
தான் வாழ்க்கை பயணம்.
-
அவரவர் விருப்பப்படி
காலத்திற்கு ஏற்றப்படி
மாறுபடுகிறது .
தர்மமும் ...
கொள்கையும்...
-
உங்களால் பேசமுடியும் என்பதற்காக
வார்த்தைகளை கொட்டாதீர்கள்.
உங்கள் வார்த்தைகளை கேட்பவர்களுக்கு
உயிரும் உண்டு...
உணர்வும் உண்டு...-
உனக்கு எது பிடிக்கவில்லையோ
அதனிடமிருந்து விலகி நில்
அது பொருளானாலும் சரி
உறவானாலும் சரி
அதையே நினைத்து
உடலையும் உள்ளத்தையும்
வருத்திக்கொள்ளாதே
அதனால் பாதிக்கப்படுவது
நீ நீ நீ மட்டும்தான்.-
ஏமாறுகிறேன் என நினைத்து
ஏமாற்ற நினைக்காதே
ஏமாற்றத்தின் வலியை உணர
நீயும் ஓர்நாள் ஏமாற்றப்படுவாய்
என்பதை மறவாதே.-
அசிங்கப்பட்ட பின்
காட்டப்படும் அன்பானது
பகலில் ஏற்றப்படும் விளக்கிற்கு சமம்
இருந்தும் பயனில்லை
எரிந்தும் பயனில்லை.-
அமைதியாக இருப்பவனை
முட்டாள் என்று எண்ணாதீர்கள்...
பேசுபவனை விட
கேட்பவனே சிறந்தவன்.
-
முட்டாள்
பழிவாங்க துடிப்பான்.
புத்திசாலி
மன்னித்து விடுவான்.
அதி புத்திசாலி
விலகி விடுவான்.-
தேவைக்காக பழகவும் மாட்டேன்
தேவை இல்லனு விட்டு
போகவும் மாட்டேன்.
என்ன தேவை இல்லனு
நீங்க நினைச்சா திரும்பி
கூட பார்க்க மாட்டேன்
இது தான் நான்.-