கண்ணனுக்காக
சீடையும் முறுக்கும்
பாலும் வெண்ணையும்
வெல்லப் பணியாரமும்
அளவில்லா பலகாரமும்
எவ்வளவுதான்
அடுக்கி அடுக்கி
கொடுத்தாலும் அன்போடு
அவன் நண்பன் குசேலனின்
அவல்தான் அலாதியாய்
அவன் ருசித்து சாப்பிடும்
அற்புத உணவு.-
https://youtube.com/@tamilmvaralarum1710?si=cnmFc0P70tJCzonO
You... read more
கோகுல கண்ணன்
கோபியரோடு
குறும்புகளோடும்
குறைவில்லா அன்போடும்
கொஞ்சிக் குலாவி
மதுராவை ஆள்பவன்-
குழலோடு அவன்
குவளையத்தை ஆள்கிறான்
குழந்தையாக அவன்
குறும்புகள் செய்கிறான்
குடத்தோடு வரும்
குமரிகளை ஈர்க்கிறான்
குணத்தாலே உயர்ந்து அவன்
குசேலரோடு நட்புறவு கொள்கிறான்.-
பிறத்தல் காதல் சாதல்
என் முடிந்துவிட
வாழ்க்கை என்பது ஒரு
முக்கோணமல்ல
ஒன்று போனால்
மற்றொன்றில் சாதிக்க
பழகுபவர்களுக்கு
வாழ்க்கை என்பது வரம்தான்
பல கோணங்களில் பாருங்கள்
வாழ வழியும் வாழ்வில்
சுவாரஸ்யமும் எல்லா இழப்புக்களையும் ஈடுசெய்யும்-
உன்னை நினைத்து
நினைத்து ஏங்குகிறேன்
எங்கோ வெறித்து
பார்த்து வாழுகிறேன்
கண்ணை இமைகள்
விரும்பவில்லை.
இமைகளை கண்களும்
ஏற்கவில்லை
ஏன் சென்றாய்
எப்போது வருவாய்
எதுவும் எனக்கு புரியவில்லை.
இருந்தும் உன்னை தேடுகிறேன்
இதயம் முழுதும் எழுதுகிறேன்.-
வண்ண வண்ணமாய்
*********************
வண்ண வண்ணமாய்
வாழ்த்து சொல்கிறாய்
எண்ணக் குவியலில்
எடுத்துக் செல்கிறேன்
சொன்ன சொற்களில்
சுவையை சேர்க்கிறேன்
சுவைத்துப் பார்க்கவே
உன்னை அழைக்கிறேன்
உந்தன் கன்னக்குழியினுள்
உயர்கவிதை படைக்கிறேன்-
விழித்துக் கொண்ட இரவு
*************************
விழித்துக் கொண்ட இரவில்
விடியும் வரை உலவ
விழிகள் மட்டுமல்ல
விரல்கள் கூட தயார்தான்
வரிகள் ஓட்டத் தேவை
வார்த்தை குவியல் தேடல்
வாங்கி வந்த சொற்களால்
வார்த்தெடுத்த கவிதையை
வாரியுனக்கு அளித்திட
விழிகள் விரிய புன்னகைத்து
விடியல் வணக்கம் கூறினாய்-
தலைமுறைக்கு
தவறாமல்சொல்ல வேண்டியது
தாவரங்களை
தள்ளி வைக்காது
தழைக்க வையுங்கள்
தாகமும் பசியும் மட்டுமல்ல
தணிக்கும் வெப்பத்தையும்-
மழை நேரத்து மயக்கம்தான்
பொரித்த சோளமும்
வறுத்த கடலையும்
கொரித்து மகிழ
வத்தக்குழம்பும்
சுட்ட அப்பளமும்
உண்டு களிக்க
தேநீரோடும் குளம்பியோடும்
பஜ்ஜியும் பக்கோடாவுமாய்
மாலை நேர சாளரவழி
தூவலை ரசிக்க
இருள் கவ்வும் நேரத்தில்
ஜவிரல் அசைவினிலோ
அலைபேசி பொத்தான்கள்
கவி எழுதுவது-