ரத்தம் சுண்டும் வரை உழைப்பதற்கு தயாராக இருப்போம்.
நமைநம்பி வாய்ப்புகள் வழங்குபவரை
ஏமாற்றாமல் இருப்போம்.
******
மாறன்மணிமாறன்
10.5.23-
தட்சணைகள் தாட்சண்ணியத்தை உருவாக்கலாம் - ஆனால்
சிறந்த தாம்பத்யத்தை உருவாக்க முடியாது.
எத்தனை காலமானாலும் சிறப்புறு சம்சார சக்கரங்கள் சலிப்பை தருவதில்லை.
இத்தனை காலமும் என்னுடன் இனிதாக பயனிக்கும்
இல்லத்தரசிக்கு இனிய இல்லறநாள் நல் வாழ்த்துகள்.
*****
மாறன்மணிமாறன்
24.4.1996 to 24.4. 2023-
தபால்காரன் தெய்வமாக
தெரிந்தான் அன்று,
மொபைல்காரன் தெய்வமாக
தெரிகிறான் இன்று.
***
காதலர்கள் அனைவருக்கும்
காதலர் தின வாழ்த்துகள்.
******
மாறன்மணிமாறன்-
முறையற்ற உறவோடு
முறையில்லா புணர்வு
புரையோடிக் கிடக்குது
பூலோகத்தில் சீர்கேடு.
*****
மாறன்மணிமாறன்
2.2.23
-
சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொள்பவர்களில்
சத்தியக் கீர்த்திகள் யார்? யார்?
சத்தியமாய் ஒருவருமில்லை.
*****
மாறன்மணிமாறன்-
அகிலத்தில் வாழும் அனைவருக்கும்
ஞாயிறு நன்காலை வணக்கம்.!
யாவரும் நலம்தானே முகநுால் நட்புகளே.!
நேற்றிரவு நன்றாக உறங்கினீர்கள்தானே
இன்னறையப் பொழுது இனிதாக அமைய
அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
*****
மாறன்மணிமாாறன்
22.1.23-
தீரா வாஞ்சை இருத்தல் நலம்.
தீரா வஞ்சனை இருத்தல் நலமா?
ஆராய்ந்துபார் அன்புடை நெஞ்சமே
அணுவளவும் வேண்டாம் வஞ்சமே.
*****
மாறன்மணிமாறன்
22.1.23-
கல்வியில் உயர்ந்தவனாய் இரு.
கலவியில் குறைந்தவனாய் இரு.
*****
மாறன்மணிமாறன்-
என்னுள் ரசவாதம் புரியும் நீதான்
என்னை ரணவாதமும் செய்கிறாய்
நீ நிகழ்த்தும் ராசவதத்தின் முன்பே
நீ செய்யும் ரணவாதம் டுமீலாகிறது.
****
மாறன்மணிமாறன்
30.12.22-