Manjukesh   (மஞ்சுகேஷ்)
76 Followers · 48 Following

Write your heart out.
Joined 16 November 2018


Write your heart out.
Joined 16 November 2018
16 OCT 2022 AT 15:04

பல நாள் என் கண்ணாடியை
தொலைத்து, தேடியுள்ளேன் ;

வைத்திருந்த இடத்தை மறந்துள்ளேன்;

சில நாள் என் தொலைந்த கண்ணாடிக்கு
Call செய்யலாம் என்றெல்லாம் தோன்றும் .

ஆனால் இன்று என் சிந்தனை என்னை கண்டு சிரிக்கிறது ," நீ முதலில் தொலைத்தது என்னை. கண்ணாடியை அல்ல" என்று.

-


7 OCT 2022 AT 10:16

என் கதைகளின் பகுதியாக
என் கவிதைகளின் பாதியாக;

என் விழிகளின் நிழலாக
என் இரவின் நிலவாக;

என் இதழ்களின் சிரிப்பாக
என் சிரிப்பு சீராக ;

இரு மனம் இணைந்து
ஒரு கணம் மணப்போமா..?

-


31 AUG 2022 AT 9:37

மனிதத்தை மறந்து
மதத்தை மதிக்கும் மனம்
மயிருக்கு சமம்.

-


18 JUL 2022 AT 22:58

வறண்ட மண்ணில் ஒரு துளி
மழை நீர் விழுவது போல;

பிடித்த எழுத்துக்கள் நழுவி கவிதையாய்
என் காகிதத்தில் விழும்.

ஆனால் ,கண்களோ எழுத்து
பிழையை தேடும்.

கைகளோ காகிதத்தை கசக்கி
எரிய துடிக்கும்.

அதில் உருவாகும் ஒரு கவிதை,
மழை பெய்த பின் தோன்றும் வானவில் போல,

கண் எதிரே தோன்றி.
காலத்திற்கும் நினைவில் நிற்கும்.

-


17 JUN 2022 AT 7:08


மனதிற்கு நெருங்கிய
நிகழ்வுகளை விட,
அவை நிகழ்ந்த இடங்களையே
நான் அதிகம் நேசிப்பேன்.

மடிந்த மலரின்
மணத்தை அதன் கிளைகள்
நினைவூட்டுவதைப் போல,

நாட்கள் கடந்தாலும்,
சில நபர்கள் மறைந்தாலும்,
அந்த இடங்களே
பல நிகழ்வுகளை நினைவூட்டும்.

சில நேரம்,
அந்த காலகட்டத்திற்கே
என்னை அழைத்தும் செல்லும்..

-


18 MAY 2022 AT 14:43

இனத்தால் படுகொலை
செய்யப்பட்ட நிலம் தான் ' ஈழம் '.

ஒரு நாள், நம் நாட்டிலும்
ஒடுக்கபட்டவரின் ஓலச்சத்தம்
நம் செவிகளை எட்டும்.

தெருவில் படிந்த இரத்த கறைகள்
நம் கண்களில் கிட்டும்.

அன்று, குரல் எழுப்பாமல்
ஒதுங்கி நின்றால்,
நாமும் சிங்களவராவோம்
நம் மண்ணும் ஈழமாகும்.

-


4 APR 2022 AT 22:21

கசங்கி கிடந்த இவன் காகிதத்தில்
கிருக்கி கிடந்தது அவளின் கருவிழி.

-


31 MAR 2022 AT 10:13

எவரின் தோட்டத்தையும் அழகாக்க
நாம் ஒரு மலரோ, இலையோ அல்ல.

நாம் பகிரும் அன்பு முதல் அறிவு வரை,
அனைத்தும் ஒரு விதையே.

இன்று விதைத்தால்
என்றோ நிழல் கிடைக்கும்
என்று நினைக்கும்
ஒரு சுயநல விதையே..

-


20 MAR 2022 AT 22:58

We might become parents for a kid.
But if we see our school bus on the roadside
we will grin like a kid.

We might have new clothes to wear.
But if we see a school uniform
Our eyes will be filled with tear.

We might now use whatsapp to chat.
But we once used exam pad to bat.

I still remember all the teacher’s name.
They Invited me to a new city
Of diversity!
Now I treat everyone
With equality!

Oh dear school,
I’m stumbling for words when I think about you.
All I need, is a time machine to get back to you.

-


7 MAR 2022 AT 21:46

உவமையெனும் பெயரில்
அவளை நதியுடன் ஒப்பிட்டு
புனிதமாக்கி விட்டான்.

உருவகமெனும் பெயரில்,
அவளை தெய்வத்துடன் ஒப்பிட்டு
தெய்வீகமாக்கி விட்டான்.

அவள் அகராதியை
இவன் எழுதுவதென்ன?
அதை மீறினால்
பின்பு ஒடுக்குவதென்ன?

-


Fetching Manjukesh Quotes