Manjari JBK   (✍️மஞ்சரிJBK)
315 Followers · 133 Following

Joined 11 October 2024


Joined 11 October 2024
10 HOURS AGO

நீ விட்டுச்சென்ற
வார்த்தைகளை
அழகுபடுத்தி
பார்க்கிறேன்
வரிசைப்படுத்தி
வாசிக்கிறேன்...

அழகிய முத்துச்சரமாக
உன் கவிதைச்சரம்
அத்தனை அழகு ...⚘️

-


10 HOURS AGO

நீயோ இவள் விட்டுச்சென்ற
வார்த்தையை சுட்டிக்காட்டுகிறாய்

நானோ நீ உடைத்தெறிந்த
இதயத்தை சுட்டிக்காட்டுகிறேன்

அந்தரத்தில் அல்லாடுது பந்தம் ...!

-


11 HOURS AGO

அவனை
பார்த்த உடனே
இருவரும்
கட்டிக்கொள்வது
மட்டுமல்ல
காதல்...⚘️

அமைதியாக
இவள்
உறங்குவதை
சத்தமில்லாது
அவன் இவளை
அழகாக
ரசிப்பது கூட
காதல் தான்...⚘️

ஏனென்றால்
அவன் அன்பு
இவள் ஆனந்தம்...⚘️

-


12 HOURS AGO

நாம் பிரிந்த பின்னும்
பின்னிக்கொண்ட
நம் நினைவுகளுக்கு தெரிகின்றது
நம் காதல் எத்தனை அழகென...

-


13 HOURS AGO

அவனின்
அதிக பட்சமான
கோவமே
இவளிடம்
அமைதி
காப்பது தான்,
எனும்போது
அவனின்
ஆளுமைகளை
ஆசைகொள்வது
தானே...
இவளுக்கு சுகம்,...
ஏனென்றால்
இவள் தவம்
அவன் வரம் !!!

-


14 HOURS AGO

என்ன
சூட்சுமமோ
தெரியவில்லை
எப்பவுமே
அடுத்த வீட்டு
ராணியை
கணக்கு
பண்றது தானே
இந்த
ராஜாக்களின்
முதற்கண்
நகர்வு...
🤣🤣🤣

-


21 HOURS AGO

உண்மையான அன்பிற்கும்
மனதிற்குள் வாழும்
ஒப்பில்லா உறவுக்கும்...

கொஞ்சும் சிணுங்களிலும்
பகட்டான வார்த்தைகளிலும்
மயங்கிக்கிடங்கும்
இம்மாய உலகில்
அன்பிற்கும் பண்பிற்கும்
மதிப்பில்லையே
என்ன செய்ய கண்மணி...

-


11 SEP AT 19:07

உதவி தான்
தனிமைக்கு
நினைவுகள்...

உதவி தான்
முதுமைக்கு
அரவணைப்பு...

உதவி தான்
காதலுக்கு
பிரிவு...

உதவி தான்
எளியோரிடம்
பரிவு...

உதவி தான்
இயலாமையில்
ஒற்றுமை...

-


11 SEP AT 18:37

எவரும் சொல்லித்தரவில்லை
வரவு செலவு கணக்கில் அம்மா தான்
கணக்கு வாத்தியார்...

-


11 SEP AT 17:44

கடந்து செல்கையில், அவனுள்
காதல் பட்டாம்பூச்சிகள் பறந்ததாம்
இவளுள் மட்டும் ஏனோ,
கவிதை பட்டாம்பூச்சிகள் பறந்தனவே...

ஏனென்றால் அவன் கவிஞன்
இவள் அவன் கவிதை...!!!

-


Fetching Manjari JBK Quotes