கற்கள்விற்கும் இவனோ கல்நெஞ்சுக் காரனோ!
பற்கள் தெரிய சிரிக்கும் பைத்தியக் காரனோ !! - இல்லை
நாடிகள் பிடித்தே நலத்தை கணிப்பவன்
நாடாளும் தன்மையை நாடியில் கொண்டவன்
ஆனாலும் வாழ்க்கையில் விளையாடி வென்றவன்
போனாலும் அயல்நாடு பழகுவதில் மன்மதன்
வேண்டாம் என்றாலும் வெறுப்பை உமிழாதவன்
வேண்டும் என்றாலும் பொய்யாய் பழகாதவன்
தொழில்ன்னு வந்துட்டா மாமாதான் கில்லி
தொல்லையா நினைச்சவன் இவன்கிட்ட பல்லி
மணிமாறன் கதிரேசன்-
குறள்வெண் செந்துறை
வேலனாம் தோழனை வேண்டியே நின்றேன்
பாலன் முருகன் பாதையைக் காட்டவே
மணிமாறன் கதிரேசன்-
உன்னைக் கடந்தும் உருக்குலைந்து நின்றனே
என்னுள்ளும் சிவனாம் என்னிலை அறியாது
உன்னையும் அடையவே உட்கடந்து சென்றனே
என்னிலும் ஒளிர்ந்ததே எம்பிரானை உணர்த்தவே
மணிமாறன் கதிரேசன்-
ஏதோ சிந்தனையில் எண்ணத்திலே ஓட்டம் - இருந்தும்
இதோ புகைப்படங்கள் கைப்பேசியில் சிக்கிடும்
அதோ எண்ணங்கள் உன்னையே தாண்டிடும் - கடந்தும்
இதோ புகைப்படங்கள் இன்னும் ஒளிரும்
மணிமாறன் கதிரேசன்-
அவனுக்கு என்ன தெரியும் சின்ன பையன்
அம்மாவின் எண்ணம்
அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியாது
அக்காவின் விளக்கம்
அவருக்கு அவ்வளவு விபரம் பத்தாது
மனைவியின் ஆதங்கம்
இத நீங்கதான் முடித்துக் கொடுக்கனும்
வாடிக்கையாளரின் நம்பிக்கை
இப்படிக்கு
பட்டதாரி கணவன்-
கந்தனே கவியனே இலகுவாய் இனியனே
நொந்தனே வெந்தனே நோக்குவாய் தமையனே
செல்வனே செப்பிலான் செருக்கையும் அகற்றுவாய்
வல்லவன் வடிவேலன் வழிகாட்டி நிற்பாயே
மணிமாறன் கதிரேசன்-
நீ போயும் நாள் ஆச்சுடி
எனக்கும் ஆசை கூடிப் போச்சுடி
எதுக்கு இன்னும் வீண் பேச்சுடி
உடனே கிளம்பி வரநான் ரெடி
மணிமாறன் கதிரேசன்-
காதலில் மலர்ந்து
காமத்தில் முகர்ந்து
காரியத்தில் சிறந்து
காலைவாரும் தெரிந்து
கவனம்கொள் மகளே - இது
கலிகாலம் உணர்ந்தே
மணிமாறன் கதிரேசன்-
உதட்டை பிழிந்து இரசத்தை
உமிழ்ந்து நீயும் அருந்தவே
உணர்வுடன் கலந்து உருகுமே
உடலுடன் கலக்க மறுகுமே
மணிமாறன் கதிரேசன்-
சூழும் கருமேகம்
சுழன்று அடித்தார்போல்
கழன்ற கூந்தல்
கருவிழியை கரைத்ததே
மீண்டும் காணவே
மீன்கள் போலவே
மீண்டும் பார்வையால்
மின்னலாய் வெட்டுகிறாய்
சூடிய பனித்துளி
சூரியனில் மறையுதே
சூடிய புன்னகை
சுருக்கமாய் நிற்குதே-