கனவு காணுங்கள் தவறில்லை!!!
கனவே கனவாகும் வரை கனவு காணாதீர்கள்...!!!-
உன்னை உறவாக நினைத்திருந்தால் உதறி
இருப்பேன்!!
உயிராக நினைத்துவிட்டேன்!!!
மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடையும் வரை மறவாது
உந்தன் நினைவுகள்!!!
-
கணவன் என்னும் பட்டத்தை தருவாய் என நினைத்தேன்!!!
(காலக்கொடுமை)
காமத்திற்காக காதலித்தாய் என்ற பட்டாத்தை கொடுத்துச்சென்றாய்?
ஏங்கி தவிக்கும் என் இதயத்திற்கு தெரியும்!!
உன்னை உயிராக நினைத்தனே தவிர, ஒரு உடம்பாக நினைக்கவில்லை!!
-
நீங்க நினைவுகள் :
உன்னுடன் பயணித்த முதல் பயணம் (அந்த பூங்கா)
அன்னையாக மாறி நீ உன்னவூட்டிய அந்த முருகன் கோவில்!!!
உன் விடுதியை நோக்கி உன் விரல் பிடித்து நடந்த அந்த பாதை!!
அரசு பேருந்தில் உன்னுடன் சென்ற நெடு நேர பயணம்!!!
இறக்கும் நாளை நாடும் எனக்கு பிறந்த நாள் கொண்டாடியா அந்த நிமிடங்கள்!!!
உடை எடுத்து கொடுத்து உடன் இருந்த அந்த நிமிடங்கள்!!!
விடியும் பொழுதை கண்ணருகில் வைத்துக்கொண்டு விடிய விடிய பேசிய உன் மழலை பேச்சு!!!
(இதை நினைத்து இறப்பனே தவிர மறக்க மாட்டேன்)
-
ஒரு இளைஞரின் ஆசை...
வாழ்வில் பல கனவுகளை கண்டிருப்பான்?
அதில் ஒரு :மனதுக்கு பிடித்த பெண்ணை மனம் முடித்து, இன்பத்திலும், துன்பத்திலும் சரிபாதியாக பிரித்துக்கொண்டு வாழ்வது..
உன்னுடன் கை கோர்த்து நெடுங்காலம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை!!
என் கனவுகளுக்கு ஊன்று கோளாக நீ இருக்க வேண்டும் என்று ஆசை!!
(எனக்கும் கனவுகள் உண்டு இப்போது அனைத்தும் கனவாக போனது)-
நீ பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எமனை சந்திக்கிறேன்!!
நீ இல்லாமல் வாழ்க்கை முழுவதும் எப்படி தவிக்கிறதோ இந்த மனம்!!!-
கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்வில் நிம்மதி நிலைக்காது!!
(காரணம் )
மனிதனின் ஆசையே இது போதாது என்பது தான்!!!-
வெற்றிடங்களிலும் சரிவதற்கான வாய்ப்பு உள்ளது... வெற்றி என்பது ஒரு அதிஷ்டம் மட்டுமே!!!
-
நான் பேசமாறுத்த ஒவ்வொரு நொடியும் இப்போது கிடைக்காதா என ஏங்கிகொண்டிருக்கிறது என் மனம்!!!
-