கடைவீதி சென்றபோது
திடீர் மழை!
தற்செயலாய் தோழியும் அங்கே...
பிறகென்ன..
நாங்கள் பேச ஆரம்பித்து
விட்டோம்..
இன்று மழை பேசியதைக்
கேட்கவே இல்லை...
-
தமிழ் மண்ணில் தோன்றிய
சுயமரியாதை இயக்கத்தின்
நூற்றாண்டைக் கொண்டாடுகிறது
லண்டன் ஆக்ஸ்போர்டு.
நடிகனுடன் சுயபடம்
எடுக்கும் வெறித்தனத்தில்
41 உயிர்களைக் காவு
கொடுத்திருக்கிறது தமிழகம்..
கூசிப் போகிறது மனசு
ஜென்-சியின் மனப்பிறழ்வு கண்டு..-
பேரன்பும்,பெரும்குறும்பும்
நவரசங்களும் ததும்பும்
நங்கையிவள் கவிதைகளில்..
நகைச்சுவை சற்று தூக்கல்..
நவோமிபியூலாவை அறிமுகம் செய்வாள்..பட்டாம் பூச்சியின்
இறுதி ஊர்வலம் செல்வாள்.
நானியைச் சீண்டுவாள்
ஞானியாய்தன்னைத்தேடுவாள்
தங்கையே தமிழ் போல
நீயும் வளமோடு வாழ்வாய்...
-
Since Teenagers are too old to do the things little children do and not old enough to do things adults do, they do Everything that nobody else does..😊
-
வேறென்ன வேண்டும்?
சொன்னதைக் கேட்கும் உடல்
சொல்லாமல் புரியும் உறவு
தரணிக்குப் பயன்தரும் இளமை
தனிமைப் பிணியற்ற முதுமை
பிரபஞ்சம் நேசிக்கும் பேரன்பு
பெரும்வதை இல்லாத மரணம்.-