Mahalakshmi Raghavan   (Mahalakshmi Raghavan)
74 Followers · 77 Following

Joined 25 November 2017


Joined 25 November 2017
20 NOV 2023 AT 9:19

எந்தை இறைவா!
உன் உற்பத்தியில்
காலத்திற்கு ஏற்ற
சில மாற்றங்கள் தேவை
இனி நீ படைக்கும்
பெண்களுக்கு
உறுப்புகளை அதிகப்படுத்து
இங்கு இருக்கும் வேலைகளுக்கு
இரண்டு கைகளும்
இரண்டு கால்களும்
ஒரு மூளையும்

போதவே இல்லை....

-


20 NOV 2023 AT 9:13

எந்தை இறைவா
உன் உற்பத்தியில்
காலத்திற்கு ஏற்ற
சில மாற்றங்கள் தேவை
இனி நீ படைக்கும்
பெண்களுக்கு
உறுப்புகளை அதிகப்படுத்து
இங்கு இருக்கும் வேலைகளுக்கு
இரண்டு கைகளும்
இரண்டு கால்களும்
ஒரு மூளையும்

போதவே இல்லை....

-


5 NOV 2023 AT 15:48

பிரச்சனைகளுக்கு
சில சமயங்களில்
தீர்வும்
பல சமயங்களில்
நேரமுமே
தேவைபடுகிறது...


-


17 OCT 2023 AT 13:20

என்னை தெரிந்தவர்களிடமும்
எனக்கு தெரிந்தவர்களிடமும்
கெஞ்சி மன்றாடுகிறேன்


என்னை என்னிடமே
தந்துவிடுங்களேன்!

-


28 SEP 2023 AT 15:20

வாழ்வின் அத்தனை
பரிமாணங்களையும்
மெதுவாக மென்று
அனுபவித்து
விழுங்கிருக்கிறேன்.
சிலவற்றை மட்டும்
நீலகண்டனைப் போல்
தொண்டைக் குழியில்
நிறுத்திக் கொண்டேன்.


அந்தக் கருநீலம்
என் துணிச்சலின்
அடையாளம்....

-


3 SEP 2023 AT 12:19

நான் கொடுத்த
சில்லறையில்
ஒரு நிமிடம்
கடவுளின்
பிரதிநிதியானால்
அந்த ஏழைக் கிழவி...

-


1 SEP 2023 AT 22:56

செத்துப்போன
கால் பெருவிரல் நகமாய்
நானும் என்றோ
இறந்துவிட்டேன்
இருந்தும்
ஒட்டிக் கொண்டிருக்கிறேன்
இந்த
உறவுச்சதைக்காக...

-


24 AUG 2023 AT 11:01

நேரத்தைத் தாண்டி
மனிதன் வாழ்க்கையில்
வீணாக்க கூடாத
மற்றொன்று....

'வார்த்தை'

-


19 AUG 2023 AT 23:15

உறவில் பல பிரச்சனைகளுக்கு
மூலகாரணமாக இருப்பதும்
அதற்கு
முழுத் தீர்வாக இருப்பதும்
அன்புதானே...!

-


17 AUG 2023 AT 21:29

அறிவையும்
ஆற்றலையும்
வெவ்வேறாக படைத்த
இறைவன்
அன்பை மட்டும்
சகல ஜீவராசிகளுக்கும்
பொதுவாய் வைத்தான்
அதனால் தான்
அவன்


இறைவன்

-


Fetching Mahalakshmi Raghavan Quotes