Madhu mitha (Rudhraa)  
257 Followers · 4 Following

போர்க்களத்துப்பூ ✨
Joined 10 November 2018


போர்க்களத்துப்பூ ✨
Joined 10 November 2018
24 JUL 2020 AT 16:34

நான் சிறுவயதில் நட்டு வைத்த
தென்னைமரங்கள் என் கனவில் வந்து கதறின.,
காதை மூடிக்கொண்டேன்.
எண்ணெய் ஆலையும் சுரங்கமும் வெடித்து என் சினேகிதியின் அப்பா உடல் கருகி செத்துப்போனார் ,
நான் கண்களை மூடிக்கொண்டேன்.
காடுகளில் வேட்டையாடும் corporate கள்
என் பிரியமான உயிர்களைக் கொன்று வீசின,
நாற்றத்தால் நான் மூக்கை மூடிக்கொண்டேன்..
நாளை EIA2020 என்னையும் கொள்ளப்போகிறது.. எதை மூடுவது என்று தெரியவில்லை.

-


19 JUL 2020 AT 20:36

Music and rain
Sand with trees ,
Breeze filled colours
You and me .,
The universe wrote it's love story.

-


15 JUL 2020 AT 19:34

சாலையோரம் செத்துக்கிடக்கும் நாயின் பிணவாடையில்,
இறப்புச் செய்திகளை மாற்றும் அலைவரிசையில்..
இன்னும் சொல்லவே இல்லாத காதலின் கற்பனைகளில்,
இறைவன் வருவான் என உயிர்த்திருக்கும் உடல்களில்..

-


15 JUL 2020 AT 19:31

நிலவுக்கும் தென்றலுக்கும் இடையில்,
மேல் மாடத்தில் நின்று பேசிக்கொண்டு..
மேகம் அவள் நிறத்தாலே பதில் கூறுவாள்.
சில முறை அழுது தீர்த்துக் கொட்டி
ஆர்ப்பரித்து விடுவாள்..
நான் மௌனம் பேசி முடித்த பின்பு

-


13 JUL 2020 AT 16:37

அகதிக் குழந்தை தெருப்பூனைக்கு பகிரும் பாலில்,
கண் இழந்தவனின் குழல் இசை இனிமையில்,
முதிர்கன்னி தீட்டுகிற காதல் கவிதையில்,
நாடோடி உடன் ஓடும் நாயின் துருதுருப்பில்,
முட்கள் கொண்ட ரோஜாவின் ஈடற்ற எழில் முகத்தில்..

புன்னகை முகம்

-


12 JUL 2020 AT 14:22

The white sky cried through a great distress
whites turned crimson ,


As I narrated the unrequited story
Of you and I

-


12 JUL 2020 AT 13:21

ஏனோ தெரியவில்லை,

மழையில் விடும் காகித கப்பலைப்
பார்க்கும்போதெல்லாம்
கொடுக்கப்படாத காதல் கடிதங்கள்,
மண்ணில் விழுந்து கிடப்பது போன்றதொரு
பிம்பம் வந்து செல்கிறது

-


11 JUL 2020 AT 22:38

என்னைத் தொடாதீர்கள்
என் மேல் ரத்தக் கவிச்சி வீசுகிறது,
கண்ணீர் வாடை படிந்துபோய்
குடலைப் புரட்டும் நாற்றம் எடுக்கிறது..

தினம் வன்புணர்வு காவு கேட்கும் உயிர்கள்..
நமக்கு சொந்தமானதாய் இருக்க
வெகு நேரம் எடுக்கப் போவதில்லை

-


11 JUL 2020 AT 14:35

நான் கற்பனைக் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
காணாமல் போன அனைவரும் கிடைத்து விட்டார்கள்,
தொலைந்த என்னை நான் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

-


25 AUG 2019 AT 9:36

ஊடல், வழிவிலகி சுவை மாறும்போதெல்லாம்
எங்கோ, வதைந்து கொண்டிருக்கிறது..
புரிதல் அற்றுப்போன ஒரு மௌனம்
உள்விழி உருத்திக்கொண்டு ஓடி வந்து
பின்னிருந்து அணைக்கும்போதெல்லாம்,
புரிதலின் தேவகைள் புகையாய் கலைகிறது

-


Fetching Madhu mitha (Rudhraa) Quotes