என் கண்ணீர்
கரைத்திடுமுன்
காதல்மழையை நாடுவதால்
இவ்விரவும்
இரக்கமில்லாமல் நீள்கிறதே !!
-
பொய்யென புலப்படா
மெய்களுடன் நான்...
Instagram : mayathoorigai
என் கண்ணீர்
கரைத்திடுமுன்
காதல்மழையை நாடுவதால்
இவ்விரவும்
இரக்கமில்லாமல் நீள்கிறதே !!
-
காத்திருக்கும் பொழுதுகளில்
நான் அந்த
மீன்கடை மதில்மேற்
திரியும் பூனையாய் !!
-
தவிர்ப்புக்கும்
அதனாலுண்டான தவிப்புக்கும்
ரகரத்தை தவிர
பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை
வலிகளையும் சேர்த்து !!
-
தலைகோதும் கரங்களால்
தவிர்க்கப்படுகையிலெல்லாம்
தலையாடும்
அஃதொரு கர்வம் மட்டும் கரைந்து
அதனுபரி தீண்டுதலும்
கரங்கள் ஒதுக்கிய என் கன்னத்தில்
கொண்ட காதலால்தானோ ?!
-