* கடவுளின் அருள் ஆசீர்....
* பிறரின் வளர்ச்சியைக் கண்டுப் பொறாமைக் கொள்ளாமை...
* பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினையாமை...
-
என் அன்பை புரிந்துக்கொள்ளாத ஜீவன்களிடமிருந்து விலகி நானும் விண்மீன்களில் ஒன்றாக மாற ஏக்கம் கொண்டேன்...
-
என்னுடைய அறிவுரைகளைக் கேட்டு கவிகளை நீ படைத்ததாலும்... என்னுடைய ஆசீர் என்றும் உன்னை காத்து வருவதாலும்... 1000 கவிகளை நீ படைத்து விட்டாய் என் அருமை உடன் பிறப்பே😉... வாழ்க வளமுடன்.. வளர்க என்றும் கவியுடன்... என்றும் உங்கள் உயர்வில் ஏணிப் படியாய் நான் 😂....
-
வாழ்க்கை பல பாடங்களை தன் விருப்பத்திற்கேற்ப கற்றுத் தரும்.. அதில் நாம் பெறும் அனுபவங்கள் நம்மை செதுக்கி கொள்வதற்காக மட்டுமே..பிறரை வேதனைப் படுத்துவதற்காக அல்ல....
-
பலர் உனக்காக துரோகங்கள் பல அரங்கேற்றி இருக்கலாம்... அதற்காக அவர்களை பழி வாங்க எண்ணாதீர்கள்..இன்று நீ செய்யும் முதலீட்டை நாளை உன் குழந்தைகளின் மூலமாக பெற்று கொள்வாய்....
-
என்றாவது ஒரு நாள் என்னை கண்டுக் கொள்வாய்... உன் விழி நீரினில்....
-
பிறர் என்ன கூறுவார்கள் என்றெண்ணி நடந்தால் படுகுழியினில் சிக்கி கொள்வாய்...நேரிய வழியில் காலடி தடத்தைப் பதித்திடு வெற்றி நிச்சயம்...
-