திருவிழா:
பல்லாயிரம் மடங்கு சுருங்கிப் போனது
அந்தக் குழந்தையின் உலகம்
ராட்டினத்தின் விட்டதிற்குள்.-
Photographer📸.
Mail id:jlogeshwar@gmail.com
மழ வந்து கூத்தாடும் முன்ன
பறந்தோடும் தட்டானப்போல;
ஒரு மின்னல் வந்து நெஞ்ச கீறும் உன் பார்வ படும் முன்ன!
தட்டான நீ புடிக்க
உன் காத நா கடிக்க
கைய கோத்து காணாம போனோம்
ஆகாசம் மேல காத்தாடி ஆனோம்!
அந்த கருப்பு கலர் மேகத்து கூடவே
கால்நெடுக்க நடந்து போனோம்!
எட்டி வெச்சு ஏறிப் போனோம்
ஏரிக்கர மேல போனோம்!
மழ ஓஞ்ச பின்னால
மயில் றெக்கய எடுத்துக்கிட்டு
மாட்ட எல்லாம் ஓட்டிக்கிட்டு
மஞ்சனத்தி நெனப்போட மாடு கூட வீடு வந்தேன்!-
கடைசி சந்திப்பில்
நம் இருவருக்கும் இடையே நெடுநேரம் உலவிக் கொண்டிருந்த
அந்த கதகதப்பை, நீ இல்லாத இரவுகளின் குளிர் நீக்க கொஞ்சம் சேமித்து வைத்துக்கொண்டேன்..!-
'அடுத்த சாட்டை' திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கள் சாதியைப் பறைசாற்றும் விதமாக கையில் ஒரு கயிறு அணிந்திருப்பது போல காண்பித்திருப்பார்கள்.
முதன் முறை அப்படத்தைப் பார்க்கும்போது, நிச்சயமாக இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று உறுதியாக நம்பினேன்.
ஆனால் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு கல்லூரியைச் சார்ந்த ஒரு சில மாணவர்கள் தங்கள் சாதியைப் பிரதிபலிக்கும் விதமாக ஒரு பக்கத்தைத் தொடங்கி, அதில் அச்சாதி குறித்த பதிவுகளையும், மீம்ஸ்களையும் மட்டுமே பதிவிட்டிருந்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. இனம், மொழி, மதம், நாடு, இவற்றை எல்லாம் கடந்து இப்பொழுது உலகம் ஒன்றுபட்டாலே ஒழிய புதிய ஒரு மாற்றத்திற்கான வழி இல்லை என்ற நிலையில் நாம் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், இந்த ஐந்தறிவு ஜீவராசிகள் தங்கள் சாதியை தூக்கிப் பிடித்துக்கொண்டு என்ன கிழிக்கப் போகிறார்கள் என்பது புரியவில்லை.
மாற்றத்தை எதிர்பார்த்து..!!!
குறிப்பு : இவர்களோடு ஒப்பிடுகையில் எந்த வகையிலும் ஐந்தறிவு ஜீவராசிகள் குறைந்தவை அல்ல.-
நீங்கள் யாரும் இல்லாத
தனிமையின் அழகியலை,
எனக்குள் நானே
எக்காளமிட்டு மகிழ்கிறேன்!-
கூர்மையாகி,
பட்டை தீட்டப்பட்டு,
பின் குத்திக் கிழிக்கும்,
தழும்புரிகளை விட மேலானது,
உருண்டு வந்து உயிர் கொல்லும்
பாறைகள்.
_
_
ரௌத்திரம் பழகு!-
நிறைய நேரங்களில்
நீங்கள் துவண்டு விழும் போதெல்லாம்,
உங்களைத் தூக்கிவிடும்
கரங்கள்
உங்களுடையதாகவே
அமைகின்றன!-
தவளைக் கூட்டத்தின்
சத்தத்திற்கு நடுவில்,
ஒரு மழைத்துளியின்
மெல்லிய வருடலை
உங்களால் உணர முடியுமாயின்,
நீங்களும் கவிஞர்களே!-