Logesh Logu   (Lovely_Logesh)
5 Followers · 5 Following

Joined 28 June 2021


Joined 28 June 2021
18 OCT 2022 AT 23:04

மை இல்லா
பேனாவுடன்
காத்திருக்கிறேன்
மாலை நேரத்தில்.
உன் கண் மையினை
கடனாக கொடுப்பாயா?
வார வட்டியாக
கவிதையை
கொடுத்து விடுகிறேன்.😜

-


15 MAY 2022 AT 22:50

அகத்தினுள்
ஓர்
அகழாய்வு.
நிரம்பி உள்ளது
நினைவுகளால்...

-


13 MAY 2022 AT 8:32

மழையில் மலையேற
Mask அணிந்து
Morning முதலே
காத்திருக்கிறது...
என் BIKE..🏍️🚴

-


12 MAY 2022 AT 12:57

ஆக்சிஜனால்
துருப்பிடித்து
அனுதினமும்
அவதிப்படும்
என் இரும்பு இதயத்தினை,
உன்
காந்த
கண்களால்
கவர்ந்து
காப்பாற்றிவிடடி

என் கண்மணியே.!!!

-


21 MAR 2022 AT 16:58

இன்றோ கவிதை நாளா...
நீயோ காகித நூலா...
உன் மனதோ பசுவின் பாலா...
நீயோ எந்தன் ஆளா?

Answer கூறவும் அலைபேசியில்..😜

-


1 MAR 2022 AT 16:50

வாயாடி..

உன் கூந்தலோ
‌மலர் உற்பத்தியில் முதலிடமா?
உன் மூச்சுக் காற்றோ
‌மனம் வீசிடும் விசித்திரமா?
உன் முகமோ
‌வாசனையின் வசிப்பிடமா?
உன் கண்களோ
‌என் இதயத்தின் வாழ்விடமா?
விடை கூறடி
என் வாயாடி!!!

-


3 FEB 2022 AT 23:05

விற்பனையாகாத
விளைபொருளாக
வீழ்ந்து மடிந்தாலும்...

வீரியமுள்ள விதைகளாக
விரைந்தெழுவோம்
விடிவதற்குள்...

இனி
ஒளிரும் பலரின் உலகம்
ஒழியும் சிலரின் கலகம்....

-


20 SEP 2021 AT 22:39

வசந்த காற்றும்.
வாடைக் காற்றாக வீசுகிறது..

விசிறியில்லா வினாடிகளில்
விளையில்லா
உன் - வியர்வை துளிகளை
வருடிய பிறகு...

-


12 DEC 2021 AT 12:24

வார்த்தைகளுக்கு
வர்ணம் தீட்டும்
வாயாடியே..
உன் நாவிலிருந்து
மூவார்த்தையை பெற்றேன்
போராடியே..

-


2 DEC 2021 AT 11:55

கவிகள் நான்காக
பிரிந்தாலும்,
கரும்புகள் நாளடைவில்
முறிந்தாலும்,

நம் காதலானது;
காலம் உள்ளவரை கலையாது; கண்மணியே...

-


Fetching Logesh Logu Quotes