Logambika Palaniswami   (லேகா கார்த்திக்)
184 Followers · 79 Following

Joined 19 April 2018


Joined 19 April 2018
24 JUN 2024 AT 1:44

"நாளை என்ன வாங்கி வர?"
என்று கேட்கிறான் அவன்!

'இன்றே நீ என்னருகே வேண்டும்
எனக் கூறி அமைதியாகிறது மனம்!

-


24 JUN 2024 AT 1:32

கேட்டு நின்றும் நீ
தரமறுக்கும் பாராட்டுகளை
திரை போட்டும்
காட்டி விடுகின்றன
உன் விழிகள்!

-


24 JUN 2024 AT 1:20

சில உறவுகள்
முடிவதே நல்லது
என நினைக்க வைக்கின்றன

-


24 MAY 2024 AT 22:41

சேலை மடிப்புகளின்
நேர்த்தியின் பின்னால்
அமைதியாக சிரிக்கிறது
என்னவனின்
காதலின் கர்வம்!

-


5 MAY 2024 AT 13:38

உன்னருகில் உள்ள போதெல்லாம்
ஆர்ப்பரித்து அடங்குகிறது
என் மனது!

-


25 APR 2024 AT 21:30

சில நொடி கவனச்சிதறலில்
சிதறிய தண்ணீராய்
இதயத்தை சட்டென
ஆட்கொண்டு விடுகிறது
உன் நினைவு!

-


24 APR 2024 AT 18:27

உன்னை
விட்டுச் செல்லும் நேரங்களில்
கொஞ்சம் அதிகமாய் தான்
எட்டிப் பார்க்கிறது
இந்தக் காதல்!

-


12 JUN 2023 AT 0:22

என் சுவாசக் குழலில்
நாதமாக அவன் பெயர் இன்னிசையாக!

-


11 JUN 2023 AT 23:35

எழுதி வைத்த நாட்குறிப்பில்
உன் விசிறியாய் மட்டுமே
என் வார்த்தைகள் அனைத்தும்!

-


11 JUN 2023 AT 23:29

சிறுமியின் ஸ்பரிசத்தால்
சிறகு முளைக்கின்றது
இதழ்களுக்கு!

-


Fetching Logambika Palaniswami Quotes