பனித்துளி படர்க்கையில் சிலிர்த்து மின்னும் புல்வெளிப் போல்,.,
சிலிர்க்குதடி என் மேனியும்
உனை காணும் வேளையிலே!!!!!-
IAS aspriant
Passionate about
trekking,
Longdrive🚲🚲🚲,
... read more
கனவுகள் கரைந்தோட
காலங்கள் கவிப்பாடும்,
காரணங்கள் கைக்கூட
காரியங்கள் கலைப்பறிக்கும்,
கலம் சென்றடைந்திட
காத்திருந்த மங்கையவள்.
கை சங்கிலியில் கிடைப்பட்டு
கணம் ஒவ்வொன்றும் கதறுகிறாள் காரிருளுக்குள்,
கண்ட கனவின் கலம் தேடி......-
கண்களை மூடிக்கொண்டு
கானும் காட்சியாவும்
தோன்றிமறையும் பின்பமும் நீ.....
பக்கம் வந்து நின்று
பொல்லாத நாணாம் கொள்ள
சொல்லாத காதலும் நீ......
என்னோடு காதல் என்று நீயும் வந்து
பின்னோடு கட்டிக்கொள்ளும் ஆசைக்கொண்டு,
காத்திருக்கும் பேதையும்தான் என்னவாகுவாள்...
தடம்புறன்டு வழிமறந்திட காதல் கொண்ட வெண்ணிலா,
வானோடுவிண்ணில் பறந்ததா.......
காணாத கள்வன் காண கறைக்கின்றதே
பிரபஞ்சம் வந்த வெண்ணிலா......
இமைகள் மூடமறத்தும்
தடைகள் தடுப்புவைத்தும்
சிரிப்பால் என்னைக் கொள்கிறாய்
குழந்தை பாவம் கொண்டு
முதுமகன் கர்வமென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்...
கடலினில் காதலொடு கால்நனைக்க வழிகள்கொடு,
அலைகள் கடந்து வந்து உன் கைகள்கோர்க்கவிடு,
தூரங்கள் கண்டுதகர்க்க ஏழுஏழு ஜென்மம் வேண்டுமோ.......
தடம்புறன்டு வழிமறந்திட காதல் கொண்ட வெண்ணிலா,
வானோடுவிண்ணில் பறந்ததா.......
காணாத கள்வன் காண கறைக்கின்றதே
பிரபஞ்சம் வந்த வெண்ணிலா......
-
என்று சொன்ன சொல்லுக்கு
மௌனமாய் புன்னகை வீசி சென்றாயே,
அதன் அர்த்தம் தான் என்ன??
மௌனம் சம்மததற்கு அரிகுறி என்றாலும்
உன் புன்னகையின் புதிர் புரியாமல்
குழம்பித் தவிக்கிறேன்,....
காலங்கள் கடந்தும் உன் வருகை எண்ணி காத்திருக்கிறேன் குழப்பம் தவிர்த்து புதிருக்கு விடை தருவாய் என்று.........-
கஷ்டங்கள் கரைத்து
சங்கடங்கள் சகித்து
சந்தோஷ அலைகாற்று வீசுகிறேன்
சிறு புன்னகையின் வழி...........-
அது தனக்கானது இல்லை என்று வருந்துவதை விட...
எது தனக்கானது என்று சிந்திப்பதே நன்றாகும்....-
ஒரு வகையில் நானும் சிற்பிதான்,
உன்னோடு நான் கொண்ட நினைவுகளை
ஒன்றோடு ஒன்றாக கோர்த்து,
சிந்தாமல் சிதறாமல் அடுக்கி, பிசிறுகள் அகற்றி,
பக்குவமாக செதிக்கினேன் சிற்பத்தை என் மனக்கூட்டில்,
அழகான நினைவுகளின் திருவுருவமாக.......-
கற்பனை கலைத்து,
மௌனங்கள் உடைத்து,
ஏக்கங்கள் குறைத்து,
காதல் கைக்கோர்த்து,
களிகூர தடம்பதித்து,
நயம் ததும்பிடும் புதுயுகம் கண்டிட......-