கவியின் கவி   (Kaviya Karuppasamy)
44 Followers · 11 Following

Joined 15 April 2020


Joined 15 April 2020

உன்னை நினைத்து
கண்ணை மூடி
கனவில் திளைத்து
இரவை தொலைத்தேன்

-



வரிகள் தரும் வெளிச்சத்தில்
வலிகளின் இருள் மறைகிறது

-



உன் நினைவில் இவள் வாட
உதிருகிறது கண்ணீர்...
பூவாய் நான் மலர
மழையாய் நீ வாடா!

-



அதீத உணர்வுகளின் கூடாரம்
விதி நினைத்து விடுவித்தால் அன்றி
விடுதலை பெறுவதென்பது
சாத்தியமில்லா ஒன்று

-



ஒன்றுக்கான நீண்ட நேர
காத்திருப்புக்கு பின்
அதை அடையும் தருணத்தில்
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அனுபவிக்க இயலாமல் போவதெல்லாம்
சொல்ல முடியாத வலி

-



தயக்கத்தின் பிடியில் இருந்து
விடுதலைக் கொடுத்து
மனதில் இருப்பவை
அனைத்தையும் கூற
வசதியான ஒரு சூழலை
உருவாக்கிக் கொடுக்கும் ஓர்
உறவு கிடைப்பதெல்லம் வரம்

-



இரவைக் கடப்பதும்
உன் நினைவுகள் இல்லாமல்
பகலை கடப்பதும்
ஒருபோதும் சாத்தியமில்லை

-



வலிகளின் வருகை சற்று
வினோதம் ஆனதே

-



பறக்கத் தான் விரும்புகிறேன்
அன்பெனும் சிறையில் பிடிபட்ட நான்

-



என் வாழ்வின்
ஒவ்வொரு பக்கத்திலும்
தவிர்க்க முடியாத
வரிகள் நீ...

-


Fetching கவியின் கவி Quotes