ஏன் என் வாழ்வில் நுழைந்தாய்..
எனக்குள் ஓர் விதையாய் விழுந்தாய்..
என பல வினாக்கள் அலைமோதுகிறது எனக்குள்..
உன்னால் அம்மாவிடம் வாங்கிய திட்டு கொஞ்சநஞ்சமில்லை..
சிறிது நேரமும் உனைபிரிய மனமில்லை..
ஏன் உனக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தேன் அது இன்னும் புரியவில்லை தெரியவில்லை..
நீயில்லாமலும் இருக்க முடியவில்லை..
உன்னை பாத்திட்டே இருந்தால் பொழுது சாய்வதும் தெரிவதில்லை..
என்னருகே நீயிருக்க பசியின்றி தூக்கமின்றி போகிறதே என்ன மாயம் செய்தாயோ..
என் உடன்பிறவா சகோவே..
நீயின்றி இயங்காது உலகு..
நீயின்றி கழியாது பொழுது..
தொலைந்த உறவையும் தேடித்தரும் தொலைபேசியே..
எனதருமை கைபேசியே ...
நீ வேணும் நான் வாழ..
நீ வேணும் என் கூட...-
அக்கா.......
தங்கைக்கு ஒரு துன்பம் வந்தா தாங்கமாட்ட..
அதநெனச்சு பாதிநாளு தூங்கமாட்ட..
நான் சிரிக்க சொல்லுவ நல்லசேதி..
நீதானே எந்தன் உயிர்பாதி..
துன்பம் வந்து எனை சூழ்ந்தால்
ஆறுதல் அன்பால் இன்பம் தந்தாய்...
கண்டதில்லை இப்படியோர் பாசம்..
எப்போதும் வீசுதே காதல் வாசம்..
உணர்ந்தேனடி உன்னிடம் இன்னொரு தாய்மை...
தாய்க்குப்பின் தமக்கை சிறப்பாய் அமைதல் இயற்க்கை..
சகோதரி கிடைப்பது ஓர் வரம் தான்..
அறட்டை அடிக்கும் ஓர் இடம்தான்..-
உறவுகளிடையே சரியான புரிதல் இல்லையெனில் பிரிதலே மிஞ்சும்
ஆனால்,
புரிதல் என்பது உறவுகளிடையே சரியாயின் பிரிதல் கூட அருகினில் வர அஞ்சும்.
-
உன் இரவு நானாக
இருவரும் சேர்ந்தே பயணிப்போம்
கார்முகில் கூடிய நம் காதல் வானிலே.-
நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.
புரியாத புதிர் அது
கிளைவிட்டு கிளைதாவும் குரங்கது
வரையறையற்ற வரம்பது
எப்போது எப்படி மாறுமென்றே தெரியாது யாருக்குமே அது புரியாது
இதற் கென ஓர் நிரந்தர நிலைகிடையாது
முடிந்தால் நீங்களும் இந்த பாழாய் போன மனித மனதைக் கற்று விடைகாணுங்களேன் பார்ப்போம்.-
நீர் வீழ்ச்சியிலிருந்து முந்திக்கொண்டு பாயும் நீரினைப்போல பல மறக்கமுடியா ஆரோக்யமான நினைவுகள் முண்டியடித்தபடி மீண்டும் மீண்டும் ஓடோடி வந்து என் மூளையை சலவைசெய்து சந்தோசப்புன்னகையை நினைவுப்பரிசாக விட்டுச்செல்கிறது.💓💓💓
-