சங்கமித்த சூரியன்
சாந்தமாய் ஒளிப்
பிரவாகம் வீசி
எழுந்தான் உலகின்
எல்லா உயிர்க்கும்
வெளிச்சமாய் நின்று
செவ்வானம் வெட்கச்
சிவப்பு பூச தன் பயணத்தை
ஆழமான அமைதியாய்
தொடர்ந்தான் அனலாய்
இந்தச் சூரியன்..

- Kamal