உனக்கு பிடித்த ஒரு வண்ணம் கூட
என் எண்ணமாக மாறுமெனில்..!
உனக்கு பிடித்த ஊர் கூட
மனம் போக அடம் பிடிக்குமெனில்...!
உனக்கு பிடித்த பாடல் கூட
என்னில் ரீங்காரமிடும் எனில்...!
உனக்கு பிடித்த உணவு கூட
என்னில் ஆர்வத்தை தூண்டுமெனில்...!
உனக்கு பிடித்த பொருள் கூட
என் பார்வையை களவாடுமெனில்...!
உனக்கு பிடித்த மனம் கூட
உன்னில் தன்னை காணுமெனில் அதுவே
- பிரியம்-
✍️Capsule opened on 25/3/02
✍️கவிப்புழு-P... read more
காகித கப்பலொன்று போவதறியாது
தற்கொலை செய்து கொள்கிறது;
ஏனோ மழலையின் கண்ணீரில்...!
நனையாதே என்ற அம்மாவின்
அதட்டலினால்...!
-
உன்னை கொதிக்க வைக்க
என்னை எறிக்கிறார்கள்...
என் ரணம் தாங்காமல் தான்
என்னை வந்து அணைத்து
கொள்கிறாயோ?
- விறகு
-
உனை ஏந்துகையில்
இதயத்திலிருந்து பொங்கிவரும்
பேரன்பானது
உனது இதழில் சிதறும்
புன்னகை கண்டு
உன் பாதத்தை தொட்டு
தரையில் நங்கூரம் இடப்படுகிறது...!
-
விழுந்தது உன் பார்வை;
சிவந்தது என் முகம்!
கல்லங்கபடம் இல்லா
உள்ளங்கையில் இட்ட
மிட்டாய் போல கரைகிறேன்...!-
வயிற்றுப் பசியை ஆற்ற -தோழி
கரங்களால் பிசைந்து ஊட்ட
கணப்பொழுதில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது...
ஏனோ - இந்த விடுதி சோறு
ஒவ்வொரு பருக்கையில் அம்மாவை நினைவூட்டி....!-
அதிக அக்கறை உண்டு
ஆனால் அன்னை இல்லை...
உரிமையில் சண்டைகளும் போட்டதுண்டு
ஆனால் சகோதரி இல்லை...
அவள் அன்பில் நான் தோற்றதுண்டு
ஆனால் தோழி இல்லை....
உறவுகளுடன் ஒப்பிட முடியா - ஓர் ஒப்பற்ற உயிராய்
(அவளின் அவள்)
-
என்னில் உன்னை கண்டேனோ?
இல்லை....
என்னையே எனக்கு யாரென்று
காண்பித்தாய் அல்லவா?
உன்னையே என்னுள்
செதுக்கி...!
நீயாய் வாழ்ந்த நாட்கள்
சில....
ஆனால்,
உன்னை போல் வாழவே
ஏங்குகிறது- மனம்
வீரத்தின் விதிவிலக்காய் - நீ
நீ உரங்கும் மண்ணில்
முளைத்த விதையாய் - இவள்
-