விளம்பரப்படுத்தியாவது
உதவிக்கு
உயிர் கொடுத்து விடுங்கள்
தன்சுவை தன்னுயிர்
தனக்குத்தான் உண்டென
நினைக்கிறான் மனிதன் !.....
-
உண்ட உணவில்
அன்னம் படைப்பதே தவறு
அதிலும்
வீசும் குப்பையில்தான்
யாசகனுக்கு
விருந்தளிப்பதென்பது
மனித கோரத்தின் உச்சம் !.....-
இல்லறம் துறந்தவர்களெல்லாம்
இறைவனாக்கப்படுகிறார்கள்
இல்லாத உண்மைக்கு
இருக்கு என்ற பொய் மேன்மைதானே !.....-
கற்றவர்களுக்கு
விளங்கி விட்டால்
இறைவனின் பொருள்
கல்லாதவர்களோடு
முடிந்து விடும்
காணிக்கையும் வழிபாடும் !.....-
சாதனைகள் பலவிதம்
அதில் - என் சாதனை
அவள் மொளனத்தை களைத்து
அங்கிருந்து அமைதியாக
வெளியேறுவதுதான் !.....
-
பேசும்
பொருளாக்கப்படாத
எந்தவொரு வளர்ச்சியும்
சாதனையின் பக்கத்தில்
அங்கீகரிக்கப்படுவது இல்லை !.....-
இன்றுவரை
கொண்டாட தவறிய
ஒன்றாகவே
இருந்து வருகிறது
தோல்வியின்
கையிலிருந்த நம்பிக்கை !.....
-
சீர்கொடுத்து வந்த அவள்
சீரெடுக்க மறுத்து
சீர்திருத்தம் செய்கிறாள்
தன் மகனிடமிருந்து !.....-
இரவு நேரம்
இருள்கூட பயம் தரும்
தனிபாதை பயணம்
பெண்ணென்ற என்னிடம்
பேதை பயமும் எனக்கில்லை
காரணம்
அவனென்ற உலகத்தில்
நான் மட்டும் !.....-
ஒருவன் உழைக்க சேமித்து வைத்தது
மற்றவன் ஓய்வெடுக்க அது துணையாகிறது என்றால்
நிச்சயம் அது
சிறந்த சேமிப்பை சார்ந்தது அல்ல !.....
-