Kumudha Krishnan Prasath   (Kumu)
30 Followers · 14 Following

Joined 16 August 2017


Joined 16 August 2017
6 APR 2019 AT 16:58

சின்னஞ்சிறு இரகசியமே!
சிதைந்துபோன இரகசியமென்ன?
கடுகளவே கருவான உன்னை- இந்த
கரியவுலகிற்கு காண்பித்தது என் பிழையோ?
- கலைந்த கருவின்
கலங்கும் தாய்

-


14 MAR 2019 AT 22:55

வேண்டுமென்று
ஏங்கியிருந்த காலங்களை
எண்ணியே
விடிந்தும் உறங்கா
விட்டில் பூச்சியாய்
விடியலைநோக்கி

-


14 MAR 2019 AT 11:17

அணைக்க முடியவில்லையேயென
அலைபேசியில் அழைக்கும்
நான்
தொடமுடியா தூரத்திலிருந்து
தொலைப்பேசியிலே எத்தனைநாளென்று
நீ
இணைப்புகளின்றி இணையுங்களென்று
காத்திருக்கும்
நம் காதல்😍

-


30 JAN 2019 AT 0:36

அலாதி ஆசைகள்
அலைபேசியிலே
தொலைதூர காதலால்

-


1 OCT 2018 AT 17:56

என் காய்ச்சலுக்கு ஔடதம்
நீ !

-


1 OCT 2018 AT 17:38

Relentless desire to guzzle the relishing” YOU”

-


28 SEP 2018 AT 23:29

காதலின் விதை
காட்டில் விழ..
கன்னி, நான்
காட்டில் விளைந்த
கள்ளியானேன்...
கள்ளி, நான்
பூப்பூத்தால்(ள்)
காட்டில் முளைத்ததன்
கதி மாறும் என்றெண்ணி
காத்திருக்க.

கதி மாறுமோ !
கன்னியின்
விதி மாறுமோ !



-


26 SEP 2018 AT 23:29

தீண்டலின்றி சீண்டலின்றி
கூடலின்றி கொஞ்சலின்றி
ஊடலின்றி உடலின்றி
உயிர் மட்டும் கொண்டு
உயர்காதல் கொள்வதே

“தொலைதூரக்காதல்”

-


26 SEP 2018 AT 23:00

இறகில் பஞ்சென
தெரிந்தும்
இறுக்கியே இளகிடச்
செய்யும்
இரும்புக்கைகள் உணர்த்தியது
இவனது
ஈடில்லாக்காதலை!

-


25 SEP 2018 AT 22:58

அவளை
சிலிர்க்க வைக்கும்
சிணுங்க வைக்கும்
மழைக்காற்றாக
நான்
மாறமாட்டேனோ!

-


Fetching Kumudha Krishnan Prasath Quotes