குமார சுவாமி   (SP)
123 Followers · 57 Following

Joined 22 June 2020


Joined 22 June 2020

காதல்
தொன்றுதொட்டு வருவது
தீராமல் வடியும் சுனை
கனவிலும்
கவிதைகளிலும்
நிலைத்து வாழ்வது
மனதில் சிலகாலம்

-



பருக பருக
ஆர்வம் கூடும்
நீ மது

விடிய விடிய
தூக்கம் கெடும்
சிவராத்திரி

-



வெயில்
காதலி
கடிதம்
குளிர்
நடுக்கம்
பொல்லாத காதல்

-



வாடைக்காற்று
கொடிக்காய்ந்த
ஆடைப்புகுந்த்தாடியது

அவள்
வா என்றழைத்தாள்

-



நீ பேச
புது பாட்டு

தினம் ஒரு
புது மெட்டு
நீ பேசு காதிலே
என் காதலே

-



பிள்ளை தமிழ்
பஞ்சுமிட்டாய்

அழகி
உன் அழகை ரசிக்கிறேன்
உயிராய் காதலிக்கிறேன்
காமமில்லா காதல்
கள்ளமில்லா முத்தம்

உன்னோடு வாழ
உயிரோடு கரைய.

-



நேர்த்திக்கடன் கழிக்க
முருகன் கோவில்
சென்றிருந்தேன்

வேண்டியும்
வேண்டியகடன் களிக்கிகவும்
மக்கள் கூட்டம்

வெளியில்
வெயிலில்
ஒரு பூனை மட்டும்
கிடைத்த மீன்துண்டை
கவ்வியபடி ஓடியது

-



சேலைக்கு காத்திருக்க
நேரமில்ல
சென்றுவிட்டது
அவனை தேடி

அவள் காத்திருப்பாள்
இனிய இரவு முடிய

-



பூத பெருவெளியே
நாக கொடுவிஷமே
ஆதி பெருசுமையே
தூய தனிஇசையே
மாளா பெருந்துயரே

எங்கிருந்து வந்தாய்

உள்ளத்தின் உள்ளமர்ந்து
ஓயாமல் எனை வதைக்கும்
அமுத பனித்துளியே.

-



எதை எதையோ
எண்ணுகிறது மனது

சரியான சரி இதுவென
சரியாக யாரரிவர்

பூமி சுற்றிக்கொண்டே
இருக்கு

குழந்தை அழுத்துக்கொண்டே
இருக்கு

-


Fetching குமார சுவாமி Quotes