போகியென்று வீட்டை சுத்தம் செய்துவிட்டேன் வீடிழந்த சிலந்தி எங்கே சென்றிருக்கும்
-
மரம் இல்லாத ஊரில் மழை பொழிவதில்லையாமே உண்மையா அப்பா என்றாள் மகள் ஆம் என்றேன்
மகள் காட்டிய மூன்று இடங்களில் தேரும் சப்பரமும் சந்தனகூடும் கடந்து போயின
-
கால்களால் பூமியை கீறி கீறி கோழி பூமியை காயப்படுந்தியும் எதையாவது உண்ண தந்துவிடுகிறது பூமி
நான் உன் பூமி
நீ எத்தனை காயப்படுத்தினாலும் உனக்கான அன்பை பரிசளிப்பேன்
-
அத்தனை அறைகள் தன்னில் சுமந்தும்
தனிக்குடித்தனம் போவதில்லை மூங்கில்கள்
-
ஒவ்வொரு துளி மழை நீரும் குளத்தில் விழும் போது
எட்டி பார்க்கிறது பறக்க துடிக்கும் குளத்து நீரின் ஆசை
-
பூ பூவென சப்தமிட்டு பூ விற்று போகும் அவன் கடைசி வரை விற்கவில்லை தன் சிரிப்🌺வை
-
பழுத்த மரம் கல்லடி படும்
காய்க்கா மரம் சொல்லடி படும்
மரத்தில் தான் எத்தனை சிலுவைகள்-
இரவு முழுவதும் அமைதியாக இருந்த கூரை வீட்டின் முன்
வெடித்த பட்டாசு குவியல்
சந்தேகம் கொள்ளாதீர்கள்
அவ்வீட்டு பிள்ளைகள் நம்பிய கடவுள் கூட வந்து கொட்டியிருக்கலாம்
-
தாயின் சிதைக்கு தீ வைத்தேன்
வலித்திருக்குமோ அன்னைக்கு
தினம் சமையலறை தகன மேடையில் புகைந்தவளுக்கு இது எம்மாத்திரம்
-
A 1 தொழில் நுட்பம்
***
இனி எனக்கு இறப்பில்லை
உயிர்த்தெழுவேன்
கணினி தொழில்நுட்பம் பயில்கிறான் மகன்
-