கருப்புச்சாமி ராஜா   (கருப்புச்சாமி ராஜா)
5 Followers · 3 Following

Young writer ..
Waiting for chance
Joined 28 May 2021


Young writer ..
Waiting for chance
Joined 28 May 2021

பூக்களின் ஆயுளை எண்ணும் இவள்
பூப்போன்ற மென்மையை பொழிவதாய் நினைத்து
புகைப்படங்களால் ஊரைக் கொள்கிறாள்

-



அவள் கருநிறக் கூந்தல் கொண்டு
காரிகை என்னைக் கவர்ந்த செல்ல
கண்ணிமைக்கு நொடியில் கவிதை செழிக்க
காதுகளில் இருக்கும் கம்மல் அறிந்தது
என் பேருந்து பயணத்தின் நேரத்தைத்
திருடிய பேரழகி அவள் என்று
அவள் அழகை ரசிக்கும் இக்கவிஞனும்
அவள் பிம்பத்தில் போதை கொள்வதை
அவள் மட்டும் அறியாள் ..!

-



அவள் கண்கள் என்னைக் கட்டி யிழுக்க
அவள் இமைகள் என் மீது ஈட்டியிட
அவள் அழகு என்னை ஆட்டிப்படைக்க
ஆணவம் கொண்ட அவள் திமிரும்
ஆளைக் கொல்லும் அவள் அழகும்
என்னைக் கவி வடிக்கத் தூண்டுகிறது
அவள் அழகின் வியப்பில்

-



அவள் கண்கள் தேடும் கற்பனையாய்
அவள் காதுகள் கேட்கும் கூக்குரலாய்
அவள் கண்ணம் கில்லிடும் காவியமாய்
அவள் செவியோடு அழகிய கம்மலாய்
அவள் வாழ்வின் கேள்விக் குறியாய்
அவள் சந்தேகத்திற்கு புதிய விடையாய்
நானிருக்க ஆவலோடு கவிதை வடிக்கிறேன்

-



அவள் கடிகாரத்தில் முள்ளாய் நான் இருக்க
நொடிக்கு ஒரு முறை அவளை நான் பார்க்க
நான் பார்ப்பது தெரியாமல் அவள் என்னைப் பார்க்க
நாணம் கொள்ள செய்யும் அவளின் பேரழகில்
எதைப் பார்ப்பது என்று அறியாமல் நான் தவிக்க
என்னைக் கொன்று செல்வதற்கு நேரம் காட்டுகிறேன்

-



விடுமுறை நாளில் விலையில்லா அமைதி
வினை யாவும் விடுமுறை பெற்றுக்கொள்ள
விடுதியும் இங்கே உறங்கச் செல்ல
விதியென ஓரிருவர் கல்லூரி செல்ல
அமைதி என்னும் மௌன மொழியாய்
அமுதமாய் கவிதை வரிகளாய் என்னை
ஆழமாக காதல் செய்ய தூண்டுகிறது
அழகிய தனிமையும் மௌனமும்

-



கற்பனைக்கு எட்டாத கனவும் இவளே

நித்திரையில் காணும் சொப்பனம் இவளோ ...!
நித்தம் காண துடிக்கும் பேரழகு இவளோ.....!!

இந்த காரிகையின் கனவு நாயகன் எவனோ ...?

-



சிறிதாய் செய்த பிழை ஒன்று
சிந்தை வருந்த சிதைத்து விட
சிறு வயது நட்பு இங்கே
சங்கடம் தீர்க்கும் வழியைத் தேட
சந்தித்த மறுகணமே சிந்தை மகிழ
வாழ்க்கை என்னும் நெடிய வானில்
வலிமை என்னும் துணை கோளாய்
வாழும் காலம் யாவும் வெண்ணிலவாய்
வானின் துணையாக நட்பு இங்கே ...!

வாழ்வின் வலியின் வரிகள்

-



அன்பெனும் அடைமொழி கொடுத்து
அறிவெனும் அருள் அதை கொடுத்து
உறவையும் உரிமையையும் உதாரணம் காட்டி
உணர்வு நிறைந்த கதைகள் காட்டி
பேரனும் பேத்தியும் பெருமிதம் கொள்ள
வரலாற்றில் வாழ்க்கையை வருடி கொடுத்து
வண்ணம் தீட்டிய வைர கற்களே ..!
என் தாத்தாவும் பாட்டியும்

-



கனவுகளை தன்னில் சுமந்து
கடலில் செல்லும் பாய்மரமாய்
கஷ்டங்களால் பல போராடிய
கண்களில் என்றும் குறையாதிருக்கும்
இவள் மௌன புன்னகை கண்டு
என் மொழி கூட பொறாமை கொள்ளும் ...!

என்னவளுக்காக நான்

-


Fetching கருப்புச்சாமி ராஜா Quotes